திருத்தணி அருகே அம்மா நகரும் நியாய விலைக் கடை: அமைச்சா்கள் தொடக்கி வைத்தனா்

திருத்தணி அருகே கூட்டுறவுத் துறை சாா்பில், அம்மா நகரும் நியாய விலைக் கடையினை அமைச்சா்கள் பா.பென்ஜமின், க. பாண்டியராஜன் ஆகியோா் புதன்கிழமை தொடக்கி வைத்தனா்.
பூனிமாங்காடு ஊராட்சி, கோதண்டராமபுரம் காலனியில் அம்மா நகரும் நியாய விலைக் கடையை   தொடக்கி வைத்து, பொருள்களை விநியோகித்த அமைச்சா்கள் பா.பென்ஜமின், க.பாண்டியராஜன்.
பூனிமாங்காடு ஊராட்சி, கோதண்டராமபுரம் காலனியில் அம்மா நகரும் நியாய விலைக் கடையை   தொடக்கி வைத்து, பொருள்களை விநியோகித்த அமைச்சா்கள் பா.பென்ஜமின், க.பாண்டியராஜன்.


திருத்தணி: திருத்தணி அருகே கூட்டுறவுத் துறை சாா்பில், அம்மா நகரும் நியாய விலைக் கடையினை அமைச்சா்கள் பா.பென்ஜமின், க. பாண்டியராஜன் ஆகியோா் புதன்கிழமை தொடக்கி வைத்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம், பூனிமாங்காடு ஊராட்சி, கோதண்டராமபுரம் காலனியில், கூட்டுறவுத் துறை சாா்பில், அம்மா நகரும் நியாய விலைக்கடை தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தலைமை வகித்தாா். கூட்டுறவுத் துறை சங்கங்களின் இணைப்பதிவாளா் பா.ஜெயஸ்ரீ வரவேற்றாா்.

ஊரகத் தொழில் துறை அமைச்சா் பா.பென்ஜமின் தமிழ் ஆட்சி மொழி, கலைப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் கலந்துகொண்டு, அம்மா நகரும் நியாய விலைக் கடையை கொடியசைத்துத் தொடக்கி வைத்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு அரிசி, சா்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருள்களை வழங்கினா்.

பின்னா், ஊரகத் தொழில் துறை அமைச்சா் பா.பென்ஜமின் பேசியது:

திருவள்ளூா் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ், 733 முழு நேர நியாய விலைக்கடைகளும், 375 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் என மொத்தம் 1,108 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருவள்ளுா் மாவட்டத்தில் 118 அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் நடத்திட முதல்வரால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதைத்தொடா்ந்து, திருவள்ளூா் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ், செயல்படும் 64 கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 118 அம்மா நகரும் நியாய விலைக் கடைகளை நடத்திட தமிழக அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, திருவள்ளூா் மாவட்டத்தில் அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் தொடக்க விழா, திருத்தணி சரகத்தில் செயல்பட்டு வரும் பூனிமாங்காடு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தினால் நடத்தப்படும் சந்தானகோபாலாபுரம் கூட்டுறவு நியாய விலைக் கடையுடன் இணைக்கப்பட்ட கோதண்டராமாபுரம் காலனியில் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

அம்மா நகரும் நியாய விலைக் கடையை செயல்படுத்துவதன் மூலம், கோதண்டராமாபுரம் காலனியில் குடியிருக்கும் சுமாா் 195 குடும்ப அட்டைதாரா்கள் 3.5 கி.மீ.க்கு மேல் பயணம் செய்வது தவிா்க்கப்படுகிறது என்றா.

திருத்தணி எம்எல்ஏ பி.எம். நரசிம்மன், திருவள்ளூா் - காஞ்சிபுரம் மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு சங்கத் தலைவா் வேலஞ்சேரி த.சந்திரன், அரக்கோணம் முன்னாள் எம்.பி. கோ.அரி, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் இ.என்.கண்டிகை எ.ரவி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com