முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
கடனை திருப்பிக் கேட்ட பெண்ணை ஆடையின்றி வீட்டிற்குள் அடைத்து வைத்து தகராறு
By DIN | Published On : 04th October 2020 05:47 PM | Last Updated : 04th October 2020 06:57 PM | அ+அ அ- |

கோப்புப் படம்
திருவள்ளூர் அருகே வாங்கிய கடனை திருப்பி கேட்ட பெண்ணிடம் தகராறு செய்து நகையை பறித்துக் கொண்டதோடு ஒரு நாள் முழுவதும் ஆடையின்றி வீட்டிற்குள் அடைத்து வைத்த சம்பவம் தொடர்பாக தனியார் நிறுவன வாகன ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து மணவாளநகர் காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து திருவள்ளூர் அருகே மணவாளநகர் காவல் நிலைய காவல்துறையினர் தரப்பில் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது, திருவள்ளூர் அருகே மணவாளநகர் பாரதியார் தெருவைச் சேர்ந்த சங்கர்ராஜின் மனைவி ஜெயலட்சுமி(33). திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன வாகன ஓட்டுநரான சரவணனின் மனைவியும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பழக்கத்தால் ஜெயலட்சுமி வீட்டிற்கு, சரவணனும், அவரது மனைவியும் அடிக்கடி சென்று அவரிடம் கடனாக பணம் பெற்றார்களாம்.
இந்த நிலையில் வாங்கிய பணத்தை ஜெயலட்சுமி திருப்பி கேட்டாராம். அதற்கு தாரமல் காலதாமதம் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பணத்தை வாங்கிக் கொண்டு திருப்பி தர மறுப்பது தொடர்பாக ஜெயலட்சுமி காவல் நிலையத்தில் சரவணன் மீது புகார் செய்தாராம். இதனால் ஆத்திரம் அடைந்த சரவணன், கடந்த 2 நாள்களுக்கு முன்பு சங்கர்ராஜ் வீட்டில் இல்லாததை அறிந்து, இரவில் ஜெயலட்சுமி வீட்டிற்கு சென்றாராம்.
அப்போது, கணவர் வெளியில் சென்றிருப்பதாக கூறியதை கேட்காமல், பணம் தராததால் புகார் செய்ததை கூறி தகராறு செய்துள்ளார். பின்னர் ஜெயலட்சுமியை மிரட்டி ஆடையின்றி வீட்டிற்குள் ஒரு நாள் முழுவதும் அடைத்து வைத்தாராம். அதைத் தொடர்ந்து அவரது கழுத்தில் கிடந்த 2 சவரன் நகையையும் பறித்துக் கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மணவாளநகர் காவல் நிலையத்தில் ஜெயலட்சுமி புகார் செய்தார்.
அதன் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தனியார் நிறுவன வாகன ஓட்டுநரான சரவணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றன