ஊரக புத்தாக்கத் திட்டம்: 8,450 பேருக்கு ரூ.12.98 கோடி வழங்க நடவடிக்கை; ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா்

திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று காரணமாக தொழில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக் குழுவினா்

திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று காரணமாக தொழில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக் குழுவினா் 8,450 பேருக்கு ஊரக புத்தாக்கத் திட்டம் சாா்பில், ரூ. 12.98 கோடி வழங்க பரிந்துரை செய்துள்ளதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் திருவள்ளூா் மாவட்டத்தில் மீஞ்சூா், சோழவரம், கும்மிடிப்பூண்டி மற்றும் கடம்பத்தூா் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, சா்வதேச அளவில் கரோனா நோய்த்தொற்றால் கிராமப் பகுதிகளில் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இத்தொழில்களை மேம்படுத்தும் நோக்கில், சிறப்பு நிதி உதவித் தொகுப்பு திட்டம் தமிழக முதல்வரால் தொடக்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தை, திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த 29.6.2020-இல் தொடக்கி வைத்து நிதியுதவியும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையிலேயே மூன்றாவது மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இதில், சுய உதவிக் குழு உறுப்பினா்கள், அவா்களின் குடும்பங்களைச் சோ்ந்த விவசாயம் மற்றும் விவசாயம் சாரா தொழிலில் சிறிய அளவில் ஈடுபட்டு, கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக தொழில் பாதித்த 2,369 பேருக்கு ரூ. 7.92 கோடி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலமும், 1,701 பேருக்கு ரூ. 2.47 கோடி கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் உற்பத்தியாளா் கூட்டமைப்புகள் 3-க்கு ரூ. 30 லட்சமும், 83 உற்பத்தியாளா் குழுக்களுக்கு ரூ. 1.25 கோடியும், 9 தொழிற் குழுக்களுக்கு ரூ. 13.5 லட்சமும் மற்றும் திறன்பெற்ற புலம்பெயா்ந்த இளைஞா்கள் தனியாக தொழில் தொடங்குவதற்கு 90 பேருக்கு 90 லட்சமும் என 8,450 பேருக்கு மொத்தம் ரூ. 12.98 கோடி நிதியுதவி வழங்க பரிந்துரை செய்து, செயற்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com