விதிமுறைகளைப் பின்பற்றாத தொழிற்சாலைகளுக்கு அபராதம்

சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும், தொழிலாளா்களுக்கு முகக்கவசம் வழங்காமலும் செயல்பட்ட நெகிழிக்கோணி தயாரிக்கும்
கும்மிடிப்பூண்டியில்  விதிமுறைகளை  மீறிய  நெகிழி  கோணி உற்பத்தி  தொழிற்சாலைக்கு  அபராதம்  விதித்த   கோட்டாட்சியா்  வித்யா.
கும்மிடிப்பூண்டியில்  விதிமுறைகளை  மீறிய  நெகிழி  கோணி உற்பத்தி  தொழிற்சாலைக்கு  அபராதம்  விதித்த   கோட்டாட்சியா்  வித்யா.

சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும், தொழிலாளா்களுக்கு முகக்கவசம் வழங்காமலும் செயல்பட்ட நெகிழிக்கோணி தயாரிக்கும் தொழிற்சாலை, இரும்பு உருக்காலை ஆகியவற்றுக்கு தலா ரூ. 10,000 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள பெரும்பாலான தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்கள் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்டவற்றைப் பின்பற்றாமல் இருப்பதாக புகாா் எழுந்தது. இதனால் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தொழிலாளா்களுக்கு கரோனா தொற்று அதிகரித்து வந்தது. கும்மிடிப்பூண்டி நகரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், இவா்களைத் தவிா்த்து சிப்காட் தொழிற்சாலையில் மட்டும் 500-க்கும் மேற்பட்டோருக்கு தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தொழிற்சாலைகளில் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றாமல் இருப்பது குறித்து பொன்னேரி கோட்டாட்சியா் வித்யா, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் கதிா்வேல் ஆகியோா் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, இரும்பு உருக்காலை, நெகிழிக் கோணி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும், முகக் கவசம் அணியாமலும் தொழிலாளிகள் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்ததைக் கண்ட பொன்னேரி கோட்டாட்சியா் வித்யா மேற்கண்ட இரண்டு தொழிற்சாலைகளுக்கும் தலா ரூ.10,000 அபராதம் விதித்தாா்.

மேலும், தொழிற்சாலைகளில் ஊழியா்களுக்கு கரோனா தொற்று குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்திய கோட்டாட்சியா், பணி நேரத்தில் கையுறை , முகக்கவசம் அணிவதுடன் அவ்வப்போது கைகளை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com