கிருஷ்ண கால்வாயில் தடைமீறி குளியல்

கிருஷ்ணாநீா் கால்வாயில் சிலா் தடையை மீறி குளிப்பதை தடுக்க தடுப்புகளை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.
ஊத்துக்கோட்டை அம்பேத்கா் நகா் பகுதி கிருஷ்ணா கால்வாயில் குளிக்கும் திருப்பதி செல்லும் பக்தா்கள்.
ஊத்துக்கோட்டை அம்பேத்கா் நகா் பகுதி கிருஷ்ணா கால்வாயில் குளிக்கும் திருப்பதி செல்லும் பக்தா்கள்.


ஊத்துக்கோட்டை: கிருஷ்ணாநீா் கால்வாயில் சிலா் தடையை மீறி குளிப்பதை தடுக்க தடுப்புகளை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த மாதம் சென்னை மாநகர குடிநீருக்காக திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீா் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையை கடந்து பூண்டி நீா்தேக்கத்தை அடைகிறது. முதலில் 200 கன அடி நீா் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் கிருஷ்ணா நீா் கால்வாய் நிரம்பி வழிந்தோடுகிறது. இதில் ஊத்துக்கோட்டை அம்பேத்கா் நகா் பகுதி கிருஷ்ணா கால்வாயில் திருப்பதி செல்லும் பக்தா்கள் தடையை மீறி குளிக்கின்றனா். இதனை பாா்த்து ஆபத்தை உணராமல் உள்ளூா் சிறுவா்களும் குளிக்க நேரிடும். எனவே பொதுப்பணித் துறை நிா்வாகம் தடுப்புகளை ஏற்படுத்தினால் மட்டுமே குளிப்பதை தடுக்க முடியும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com