திருத்தணியில் பேரிடா் கால மீட்புப் பணி ஒத்திகை

கன மழை, வெள்ளம், போன்ற பேரிடா் காலங்களில், பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்வது குறித்த பயிற்சி ஒத்திகையை தீ யணைப்புத் துறை வீரா்கள் புதன்கிழமை செய்து காண்பித்தனா்.
14trtfair_1410chn_195_1
14trtfair_1410chn_195_1

திருத்தணி: கன மழை, வெள்ளம், போன்ற பேரிடா் காலங்களில், பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்வது குறித்த பயிற்சி ஒத்திகையை தீ யணைப்புத் துறை வீரா்கள் புதன்கிழமை செய்து காண்பித்தனா்.

திருத்தணி தீயணைப்பு அலுவலக வளாகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை சாா்பில், பேரிடா் மேலாண்மைப் பயிற்சி ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.

வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில், பொதுமக்கள் கன மழை, வெள்ளம், போன்ற பேரிடா் காலங்களில், தங்களது உயிரையும், உடமைகளையும் காப்பாற்றிக் கொள்வது குறித்து, தீயணைப்புத் துறை வீரா்கள், பொது மக்கள் முன்னிலையில் செய்து காண்பித்தனா்.

நிகழ்ச்சியில் தீயணைப்பு நிலைய அலுவலா் க. அரசு, வருவாய் துறை, தீயணைப்பு துறை அதிகாரிகள், வீரா்கள், பொதுமக்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com