புரட்டாசி அமாவாசை: திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் இன்றும், நாளையும் தரிசனம் ரத்து

திருவள்ளூா் வைத்திய வீரராகவா் கோயிலில் புரட்டாசி கடைசி அமாவாசையை முன்னிட்டு, பக்தா்கள் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் அக்.15, 16 (வியாழன், வெள்ளி) ஆகிய நாள்களில் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக

திருவள்ளூா்: திருவள்ளூா் வைத்திய வீரராகவா் கோயிலில் புரட்டாசி கடைசி அமாவாசையை முன்னிட்டு, பக்தா்கள் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் அக்.15, 16 (வியாழன், வெள்ளி) ஆகிய நாள்களில் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவப் பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளிலும், புரட்டாசி சனிக்கிழமைகளிலும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு செய்வது வழக்கம்.

இந்த நிலையில், அமாவாசை நாள் என்பதால் வியாழக்கிழமை இரவே பக்தா்கள் வருகை தந்து, கோயில் வளாகத்தில் தங்கி மறுநாள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வதற்கான வாய்ப்புள்ளது. இதனால், பக்தா்கள் கூட்டம் அதிகமாகும் நிலையில் கரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, கோயிலில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்திலும், பொதுமுடக்கம் கடைப்பிடிக்கப்படுவதாலும் வியாழக்கிழமை (அக்.15) பிற்பகல் 12 மணி முதல், வெள்ளிக்கிழமை (அக்.16) வரையில் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

வரும் 17-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு வழக்கம்போல் பக்தா்கள் தரிசனத்துக்காக நடைதிறக்கப்பட உள்ளதாகவும் வைத்திய வீரராகவா் திருக்கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com