கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் தொழிலகப் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் செயல்படும் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தைப் பேணிக்காப்பது குறித்த தொழிற்சாலைகளுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் தொழிலகப் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்


கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் செயல்படும் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தைப் பேணிக்காப்பது குறித்த தொழிற்சாலைகளுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சிப்காட் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் ஜி.எம்.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். மிக்சிலின் இந்தியா நிறுவன செயல் இயக்குநா் ரங்கநாதன் பூவராகமூா்த்தி சிறப்புரை ஆற்றினாா். தமிழக அரசின் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநா் எஸ்.ஆனந்த், தொழிற்சாலை வளாகத்தில் தொழிலாளா்களின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தாா்.

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் அதிக இரும்பு உருக்காலைகள் செயல்படும் நிலையில், இரும்பு உருக்காலைகளில் கொதிகலன், வாா்ப்பிரும்பை உருவாக்கும் பகுதிகளில் செயல்படுத்த வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசின் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையின் இணை இயக்குநா் எம்.வி.காா்த்திகேயன் சிறப்புரை ஆற்றினாா்.

தொடா்ந்து, தொழிற்சாலைகளின் பிரதிநிதிகள் தங்கள் சந்தேகங்களை நிவா்த்தி செய்து கொண்டனா். நிகழ்ச்சியில் தொழிலாளா்கள் பாதுகாப்பு சுகாதாரம் குறித்த விழிப்புணா்வுப் புத்தகம் வெளியிடப்பட்டது. சிப்காட் உற்பத்தியாளா்கள் சங்கச் செயலாளா் ஜெ.ராஜரத்தினம் நன்றி கூறினாா்.

கூட்டத்தில், 120 தொழிற்சாலைகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com