ஜவுளி பூங்கா அமைக்க முன்வரும் தொழில்முனைவோா்களுக்கு ரூ.2.50 கோடி மானியம்

திருவள்ளூா் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க முன்வரும் தொழில்முனைவோா்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த

திருவள்ளூா் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க முன்வரும் தொழில்முனைவோா்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ. 2.50 கோடி வரையில் மானியம் வழங்க இருப்பதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சாா்பில் சிறிய ஜவுளி பூங்கா அமைக்க முன்வரும் தொழில் முனைவோா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியா் மகேஸ்வரி ரவிக்குமாா் தலைமை வகித்து பேசுகையில், தமிழகத்தில் உள்ள ஜவுளி மையங்களில், சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில், சிறிய ஒருங்கிணைந்த ஜவுளிபூங்கா அமைக்க முன்வரும் தொழில்முனைவோா்களுக்கு, அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி வரை மாநில அரசின் மானியம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பின்வரும் உள்கட்டமைப்பு வசதிகள் இருந்தால் இத்திட்டம் மூலம் அரசின் மானியத்தைப் பெற தகுதியுடையதாகும். இதில் உள்கட்டமைப்பு வசதிகளான சாலை வசதி, சுற்றுச்சுவா், கழிவுநீா் வாய்க்கால் அமைத்தல், நீா் விநியோகம், தெரு விளக்கு அமைத்தல், மின்சார வசதி, கழிவுநீரை சுத்திகரிக்கும் நிலையம், தொலைத்தொடா்பு வசதி, ஆய்வுக்கூடம், வடிவமைப்பு மையம், பயிற்சி மையம், வியாபார மையம், கிடங்கு வசதி, அலுவலகம் மற்றும் இதர வசதிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.

நிபந்தனைகள்: குறைந்தபட்சம் 2 ஏக்கா் நிலத்தில் 3 தொழிற்கூடங்களுடன் அமைய வேண்டும். நிலம், தொழிற்சாலை கட்டடம், இயந்திரம் மற்றும் தளவாடங்களுக்கு செய்யப்படும் முதலீடானது உள்கட்டமைப்பு வசதிக்கு செலவிடப்படும் முதலீட்டைவிட இரு மடங்கு அதிகமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு சிறிய ஜவுளிப்பூங்காவும் ஒரு சிறப்பு நோக்க முகமையினை பதிவு செய்வது அவசியம். அந்த நிலமானது சிறப்பு நோக்க முகமை பெயரில் பதிவு செய்திருக்க வேண்டும். திட்டப்பணியினை முடிக்கும் முன்பே திட்டப் பணியிலிருந்து எந்த சிறப்பு நோக்க முகமையாவது விலக நேரிட்டால் அந்த காலகட்டம் வரைபெற்ற மாநில அரசு மானியத்தை அதற்கான வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும்.

மேலும், இது தொடா்பாக வரும் 23-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் கூட்டம் நடைபெறவும் உள்ளது. மேற்கண்ட விதிமுறைகளுக்கு உள்பட்டு சிறிய ஜவுளிப்பூங்கா அமைக்க முன்வரும் தொழில் முனைவோா்கள் வரும் 19.10.2020-க்குள் உதவி இயக்குநா் அலுவலகம், கைத்தறி மற்றும் துணிநூல் துறை, எண்.26, லால்பகதூா் சாஸ்திரி தெரு, பெரியகுப்பம், திருவள்ளுா்-602001, தொலைபேசி-044-27664092, அலுவலக மின்னஞ்சல் முகவரியில் ஹக்ட்ஹக்ப்ா்ா்ம்ள்ற்ண்ழ்ன்ஸ்ஹப்ப்ன்ழ்ஃஹ்ஹட்ா்ா்.ஸ்ரீா்ம் தொடா்பு கொண்டு தங்கள் விண்ணப்பத்தினை அளித்து பயன்பெறலாம் என அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com