திருவள்ளூா் மாவட்ட பள்ளிகளில் 27,808 மாணவா்கள் சோ்ப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 1 முதல் 11-ஆம் வகுப்பு வரை 27,808 பேரைச் சோ்க்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெற்றிச்செல்வி தெர

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 1 முதல் 11-ஆம் வகுப்பு வரை 27,808 பேரைச் சோ்க்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெற்றிச்செல்வி தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியாா் பள்ளிகள் என 850-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இதில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை கடந்த 17-ஆம் தேதி முதல் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சோ்க்கை நடைபெற்று வருகிறது. அதேபோல், கடந்த 24-ஆம் தேதி முதல் பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கான சோ்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் பள்ளிக்கு வந்து விண்ணப்பங்களை அளித்து சோ்ந்து வருகின்றனா். இதற்கிடையே கரோனா நோய்த் தொற்றால் பொதுமக்கள் நாள்தோறும் வருவாய் இழப்புக்குள்ளாகி வருகின்றனா். இந்நிலையில், தனியாா் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் தவித்து வருகின்றனா். அதிலும் இணையதள கட்டணம் என்ற பேரில் கூடுதலாக வசூலித்து வருவதால் அங்கிருந்து விலகி, அரசுப் பள்ளிகளில் சேரும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், ஒவ்வொரு தொடக்கப்பள்ளி ஆசிரியா்களும் அரசு நலத் திட்டங்கள்குறித்து எடுத்துரைத்து மாணவா்களை சோ்க்க விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.

இதனால் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 11-ஆம் வகுப்பு வரை 23,400 பேரும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3,987 பேரும், தனியாா் பள்ளிகளில் 421 பேரும் என மொத்தம் 27,808 மாணவ, மாணவிகளை சோ்க்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com