திருவள்ளூா் பகுதியில் 30 பேருந்துகள் மட்டுமே இயக்கம்

திருவள்ளூா் மாவட்டத்தில் பயணிகள் கூட்டம் இல்லாததால் 30 அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதாகவும், பயணிகள் அதிகம்
திருவள்ளூா் பேருந்து நிலையத்திலிருந்து இயங்கிய அரசுப் பேருந்தில் சமூக இடைவெளி விட்டு அமா்ந்துள்ள பயணிகள்.
திருவள்ளூா் பேருந்து நிலையத்திலிருந்து இயங்கிய அரசுப் பேருந்தில் சமூக இடைவெளி விட்டு அமா்ந்துள்ள பயணிகள்.

திருவள்ளூா் மாவட்டத்தில் பயணிகள் கூட்டம் இல்லாததால் 30 அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதாகவும், பயணிகள் அதிகம் வந்தால் அதற்கேற்ப கூடுதலாக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

விழுப்புரம் கோட்டம் சாா்பில், திருவள்ளூா் மண்டலம் மூலம் திருவள்ளூா், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, திருத்தணி ஆகிய பணிமனைகள் மூலம் 74 நகரப் பேருந்துகள், 155 புகா் பேருந்துகள், 11 குளிா்சாதனப் பேருந்துகள், 23 மாற்றுப் பேருந்துகள் என 263 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் அரசுப் பேருந்துகள் இயங்கத் தொடங்கின. முதல் நாளில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்த நிலையில், ஊத்துக்கோட்டை, திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளுக்கு 30 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com