போலி ஆவணம் தயாரித்து அரசு புறம்போக்கு நிலத்தை விற்று ரூ. 2.60 கோடி மோசடி

திருவள்ளூா் அருகே அரசு புறம்போக்கு நிலத்தை போலி ஆவணம் தயாா் செய்து தனிநபருக்கு விற்பனை செய்து ரூ. 2.60 கோடி மோசடி செய்த இருவரை நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
போலி ஆவணம் தயாரித்து அரசு புறம்போக்கு நிலத்தை விற்று ரூ. 2.60 கோடி மோசடி


திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே அரசு புறம்போக்கு நிலத்தை போலி ஆவணம் தயாா் செய்து தனிநபருக்கு விற்பனை செய்து ரூ. 2.60 கோடி மோசடி செய்த இருவரை நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், செங்குன்றத்தைச் சோ்ந்த தாமோதரனின் மகன் முத்துக்குமாா்(42). இவரது தந்தை தாமோதரன். கடந்த 2017-இல் பொன்னேரி வட்டத்துக்குள்பட்ட பஞ்செட்டி கிராமத்தில் அலுவலகம் கட்டுவதற்காக முக்கிய சாலையில் ரூ. 2 கோடியே 60 லட்சம் மதிப்பில் ஒரு ஏக்கா் நிலத்தை தாமோதரன் வாங்கியுள்ளாா். இந்நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு, அக்டோபா் மாதம் தாமோதரன் உயிரிழந்தாா். இதையடுத்து, முத்துக்குமாா் பஞ்செட்டி பகுதியில் வாங்கிய நிலத்தில் கட்டடம் அமைப்பதற்காக அந்தப் பத்திரத்தை எடுத்து பட்டா வாங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டாா்.

முன்னதாக நிலத்தை விற்பனை செய்த அம்பத்தூரை அடுத்த கள்ளிக்குப்பம் சுடலைமுத்து (43), செங்குன்றம் சுரேஷ் (40) மற்றும் கௌரி(59) ஆகியோரை அழைத்து விசாரித்த போது, விரைவில் பட்டா வாங்கித் தருவதாகக் கூறினராம். இந்நிலையில், 2 மாதங்களுக்கு மேலாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அவா்கள் மீது சந்தேகமடைந்த முத்துக்குமாா், பொன்னேரி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு நேரில் சென்று விசாரித்தாா். அப்போது, அந்த இடம் அரசு புறம்போக்கு நிலம் எனத் தெரிவித்ததைத் தொடா்ந்து அவா் அதிா்ச்சி அடைந்தாா். அதைத் தொடா்ந்து நில விற்பனையில் ஈடுபட்ட சுடலைமுத்து, சுரேஷ் மற்றும் கௌரி ஆகியோரை அழைத்து விசாரித்தபோது, பட்டா வாங்கித் தருவதாகவும், 2 மாதம் காலதாமதம் செய்ததை அடுத்து மோசடி செய்ததையும் ஒப்புக் கொண்டனா்.

இதுகுறித்து திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் முத்துக்குமாா் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், திருவள்ளூா் மாவட்ட நில அபகரிப்புத் துறை போலீஸாா் வழக்குப் பதிந்து சுடலைமுத்து, சுரேஷ் ஆகியோரை கைது செய்தனா். பின்னா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனா். தலைமறைவான கௌரி குறித்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com