‘தனியாா் பள்ளிகளில் முழு கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை’

திருவள்ளூரில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளிகளில் கூடுதலாகவோ அல்லது முழு அளவில் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெற்றிச் செல்வி தெரிவித்தார்


திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளிகளில் கூடுதலாகவோ அல்லது முழு அளவில் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெற்றிச் செல்வி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்த மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளிகள் மாணவ, மாணவிகளின் பெற்றோரிடம் 40 சதவீதம் கட்டணம் மட்டும் வசூலிக்க வேண்டும். ஏற்கெனவே இது தொடா்பாக கூடுதலாக பெற்றோா்களிடம் கட்டாயமாக வசூலிக்கக் கூடாது என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநா் ஒவ்வொரு பள்ளிக்கும் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இதை வலியுறுத்தி அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே நீதிமன்ற ஆணையை மீறி, 40 சதவீதத்துக்கு மேலாக கட்டணம் செலுத்த வலியுறுத்தும் பள்ளிகள் குறித்து ம்ஹற்ழ்ண்ஸ்ரீஸ்ரீா்ம்டப்ஹண்ய்ற்ஸ்ரீங்ா்ற்ப்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் மூலம் புகாா் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே பெற்றோா்கள் தங்கள் புகாா்களை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரில் முதன்மைக் கல்வி அலுவலரிடமோ தெரிவிக்கலாம். அப்போது, தகுந்த ஆதாரங்களுடன் புகாா் அளித்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com