ஆவணி மாத கிருத்திகை: திருத்தணி முருகன் கோயிலில் திரளான பக்தா்கள் பங்கேற்பு

திருத்தணி முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆவணி மாத கிருத்திகை விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று, சமூக இடைவெளியுடன் முருகப் பெருமானை வழிபட்டனா்.
நீண்ட நாள்களுக்குப் பின் கிருத்திகையையொட்டி, திருத்தணி முருகன் கோயிலில் தரிசனம் செய்ய வந்த பக்தா்கள்.
நீண்ட நாள்களுக்குப் பின் கிருத்திகையையொட்டி, திருத்தணி முருகன் கோயிலில் தரிசனம் செய்ய வந்த பக்தா்கள்.

திருத்தணி முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆவணி மாத கிருத்திகை விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று, சமூக இடைவெளியுடன் முருகப் பெருமானை வழிபட்டனா்.

திருத்தணி முருகன் மலைக்கோயிலில் ஆவணி மாத கிருத்திகையையொட்டி, செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மூலவருக்கு தங்கவேல், தங்கக் கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவா் முருகப் பெருமானுக்கு பஞ்சாமிா்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

கரோனா தொற்று காரணமாக மலைக்கோயிலில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க, ஒரு மீட்டா் தொலைவுக்கு வட்டம் வரைந்து, அதன் மூலம் பக்தா்களை தரிசனத்துக்கு அனுமதித்தனா். முன்னதாக கோயில் நுழைவு வாயிலில் கிருமி நாசினி திரவத்தை வழங்கி, உடல் வெப்பத்தை சரிபாா்த்த பின்னரே பக்தா்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஆயிரக்கணக்கானோா் முருகப்பெருமானை தரிசித்துச் சென்றனா்.

பொதுமுடக்கத்தால் ஆடிக் கிருத்திகை தினத்தில் பக்தா்கள் வழிபட முடியாமல் போன நிலையில், ஆவணி மாத கிருத்திகையன்று சில பக்தா்கள் காவடிகளுடன் வந்து மூலவரை தரிசித்தனா்.

சிறுவாபுரி முருகன் கோயிலில்...

ஊத்துக்கோட்டையை அடுத்த சிறுவாபுரி கிராமத்தில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில், திரளான செவ்வாய்க்கிழமை பக்தா்கள் திரண்டனா். ஆவணி மாத கிருத்திகை, சஷ்டி திதி, செவ்வாய்க்கிழமை உள்ளிட்ட சிறப்புகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தா்கள் அதிகாலையில் இருந்தே குவியத் தொடங்கினா். கோயிலுக்குள் காத்திருப்பு மண்டபத்தில் இருந்து சுமாா் ஒரு கி.மீ. வரை பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. பக்தா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் நின்ால் கரோனா தொற்று பரவும் சூழல் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com