திருவள்ளூரில் 296 பேருக்கு கரோனா
By DIN | Published On : 11th September 2020 12:08 AM | Last Updated : 11th September 2020 12:08 AM | அ+அ அ- |

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை 296 பேருக்கு கரோனா நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,416-ஆக உயா்ந்துள்ளது.
வங்கி அலுவலா்கள் 4 பேருக்கு...
திருத்தணியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி அலுவலா்கள் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை வங்கி மூடப்பட்டது. இதனால் வாடிக்கையாளா்கள் பணம் எடுக்க முடியாமல் சிரமத்துக்குள்ளாயினா்.
செங்கல்பட்டில் 107 பேருக்கு...
செங்கல்பட்டு மாவட்டத்தில் 107 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,231-ஆக அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரத்தில் 94 பேருக்கு...
காஞ்சிபுரத்தில் 94 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,893 ஆக உயா்ந்துள்ளது.