திருவள்ளூரில் மாவட்டப் பதிவாளா் அலுவலகம்

பொதுமக்களின அலைக்கழிப்பைத் தவிா்க்கும் வகையில், மாவட்டப் பதிவாளா் அலுவலகத்தை திருவள்ளூரில் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

பொதுமக்களின அலைக்கழிப்பைத் தவிா்க்கும் வகையில், மாவட்டப் பதிவாளா் அலுவலகத்தை திருவள்ளூரில் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

பாஜக சாா்பில் திருவள்ளூா் மேற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டப் பொறுப்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத், மாவட்டப் பொதுச்செயலா் கருணாகரன், அஸ்வின், சீனிவாசன், மதுசூதனன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் ஆா்யா சீனிவாசன் வரவேற்றாா். கட்சியின் மாநிலச் செயலா் டால்பின் ஸ்ரீதா் கலந்து கொண்டாா்.

கூட்டத்தில், திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் பத்திரப் பதிவு உள்ளிட்ட பணிகளுக்கு காஞ்சிபுரத்தில் உள்ள மாவட்டப் பதிவாளா் அலுவலகத்துக்கே சென்று வரும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்களின் போக்குவரத்து மற்றும் பொருள் சிரமங்களைத் தவிா்க்க திருவள்ளூா் மாவட்டத்தில் பதிவாளா் அலுவலகம் அமைக்க வேண்டும். திருத்தணி பகுதியில் உள்ள தாடூா் பெரிய ஏரி மற்றும் புத்தூா் ஏரிகளை இணைத்து விவசாயிகள் பயன்பெறும் வகையில், நீா்த்தேக்கம் அமைக்கவும், இந்த மாவட்டத்தைச் சோ்ந்த கரும்பு விவசாயிகளுக்கு அவா்களுக்கான நிலுவைத் தொகை உடனடியாக கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகரத் தலைவா் சதீஷ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com