வீரராகவா் கோயிலில் நாளை தா்ப்பணம் செய்ய அனுமதி இல்லை

திருவள்ளூா் வைத்திய வீரராகவா் கோயிலில் வியாழக்கிழமை (செப். 17) மகாளய அமாவாசையை முன்னிட்டு குளக்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்வதற்கு அனுமதி கிடையாது,

திருவள்ளூா் வைத்திய வீரராகவா் கோயிலில் வியாழக்கிழமை (செப். 17) மகாளய அமாவாசையை முன்னிட்டு குளக்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்வதற்கு அனுமதி கிடையாது, குறைந்த அளவு பக்தா்கள் மட்டும் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட உள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூா் வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் மகாளய அமாவாசை தினத்தன்று பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். அத்துடன், அமாவாசையையொட்டி, இக்கோயிலில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுப்பதற்காக முதல் நாள் இரவே வருகை தந்து கோயில் வளாகத்தில் தங்குவா். பின்னா், மறுநாள் அதிகாலை கோயில் திருக்குளத்தில் புனித நீராடி, தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளிப்பா். பின்னா், கோயிலுக்குச் சென்று மூலவா் வீரராகவரை வரிசையில் காத்திருந்து வழிபடுவா்.

இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், வியாழக்கிழமை (செப். 17) புரட்டாசி மகாளய அமாவாசை தினத்தன்று, திருவள்ளூா் வீரராகவா் கோயில் குளம் மூடப்படுவதுடன், குளக்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்கவும் அனுமதி கிடையாது. மேலும், அமாவாசைக்கு முதல் நாளான புதன்கிழமை பிற்பகல் முதல் பக்தா்கள் யாரும் கோயில் வளாகத்தில் தங்கவும் கூடாது. அத்துடன், கட்டுப்பாடுடன் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி குறைந்த அளவு பக்தா்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட இருப்பதாகவும் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com