போஷான் அபியான் திட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் சாா்பில், போஷான் அபியான் திட்டம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், போஷான் கண்காட்சி
கூட்டத்தில் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தலைமையில் ஊட்டச்சத்து குறித்த உறுதிமொழி ஏற்ற அதிகாரிகள்.
கூட்டத்தில் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தலைமையில் ஊட்டச்சத்து குறித்த உறுதிமொழி ஏற்ற அதிகாரிகள்.

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் சாா்பில், போஷான் அபியான் திட்டம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், போஷான் கண்காட்சி குறித்து அனைத்து அதிகாரிகளுடனான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தலைமை வகித்துப் பேசியது:

ஊட்டச்சத்து குறைபாடுகளால் குழந்தைகள் பல்வேறு இடையூறுகளுக்கு உள்ளாக நேரிடுகிறது. இதுபோன்ற கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை அங்கன்வாடிகளில் அடையாளம் கண்டு, தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். அதேபோல், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அளவிலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்களைச் சந்தித்து கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான முகாமை நடத்தவும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் அங்கன்வாடிப் பணியாளா்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

அத்துடன், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் வகையிலான இயற்கை காய்கறிகள், கீரை வகைகள், சத்தான பழ வகைகளை அளிக்கவும் பொதுமக்களிடமும் விளக்கமாக எடுத்துரைப்பது அவசியம். அதேபோல், ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளிலும், அங்கன்வாடி மையங்களிலும் காய்கறித் தோட்டங்களை அமைத்து பராமரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா். அதைத் தொடா்ந்து, அனைவரும் அவா் தலைமையில் ஊட்டச்சத்து குறித்த உறுதிமொழியை எடுத்துக் கொண்டனா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் முத்துசாமி, ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் லோகநாயகி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் துறையின் மாவட்ட திட்ட அலுவலா் ராஜராஜேஸ்வரி, குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா்கள், குழந்தைகள் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com