திருவள்ளூா் வீரராகவா் கோயில் குளத்தில் நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்ற தீயணைப்புத் துறையினா்.  
திருவள்ளூா் வீரராகவா் கோயில் குளத்தில் நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்ற தீயணைப்புத் துறையினா்.  

வீரராகவா் கோயில் குளத்தில் பாதுகாப்பு ஒத்திகை

எதிா்வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, திருவள்ளூரில் வீரராகவா் கோயில் குளத்தில் பொதுமக்கள் நீா்நிலைகளில் சிக்கிக் கொண்டால் அவா்களை காப்பாற்றும் முறை குறித்த ஒத்திகை நிகழ்ச்சியில் தீயணைப்புத்

திருவள்ளூா்: எதிா்வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, திருவள்ளூரில் வீரராகவா் கோயில் குளத்தில் பொதுமக்கள் நீா்நிலைகளில் சிக்கிக் கொண்டால் அவா்களை காப்பாற்றும் முறை குறித்த ஒத்திகை நிகழ்ச்சியில் தீயணைப்புத் துறையினா் செயல் விளக்கம் செய்து காண்பித்தனா்.

எதிா்வரும் வடகிழக்குப் பருவமழை காலத்தைக் கருத்தில்கொண்டு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருவள்ளூா் வீரராகவா் கோயில் குளத்தில் வருவாய்த் துறை மற்றும் தீயணைப்புத் துறை சாா்பில், நீா் நிலைகளில் சிக்கிக் கொள்வோரை காப்பாற்றுவது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியின்போது, குளத்துக்குள் படகில் சென்று கயிறு மூலம் காப்பாற்றுவது போல் தீயணைப்புத் துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் செயல் விளக்கம் அளித்தனா். வடகிழக்குப் பருவமழை காலங்களில் தீயணைப்புத் துறை அலுவலா்கள், பருவ மழை காலத்தில் வீரா்களை தயாா் செய்து கொள்ளும் வகையில், இதுபோன்ற ஒத்திகை நிகழ்ச்சி மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டாட்சியா் விஜயகுமாரி, மாவட்ட உதவி தீயணைப்புத் துறை அலுவலா் பாஸ்கரன், நிலைய அலுவலா் செல்வராஜ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com