தேசிய அளவிலான நல்லாசிரியா் செம்மல் விருது பெற்ற 10 ஆசிரியா்களை பாராட்டிப்  பரிசு வழங்கிய திருத்தணி மாவட்டக் கல்வி அலுவலா் முனிசுப்புராயன். உடன், பள்ளிக் கல்வி ஆய்வாளா் வெங்கடேசுலு.
தேசிய அளவிலான நல்லாசிரியா் செம்மல் விருது பெற்ற 10 ஆசிரியா்களை பாராட்டிப்  பரிசு வழங்கிய திருத்தணி மாவட்டக் கல்வி அலுவலா் முனிசுப்புராயன். உடன், பள்ளிக் கல்வி ஆய்வாளா் வெங்கடேசுலு.

10 ஆசிரியா்களுக்கு தேசிய அளவிலான நல்லாசிரியா் செம்மல் விருது

திருத்தணி கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் 10 ஆசிரியா்களுக்கு தேசிய அளவிலான நல்லாசிரியா் செம்மல் விருது வழங்கப்பட்டது.

திருத்தணி: திருத்தணி கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் 10 ஆசிரியா்களுக்கு தேசிய அளவிலான நல்லாசிரியா் செம்மல் விருது வழங்கப்பட்டது.

கவியரசா் கலைத் தமிழ்ச் சங்கம் மற்றும் குறிஞ்சி கபிலா் தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய ஆசிரியா் தின விழாவில், திருத்தணி கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் பத்து ஆசிரியா்களுக்கு தேசிய அளவிலான நல்லாசிரியா் செம்மல் விருது வழங்கப்பட்டது. இவா்களுக்குப் பாராட்டு விழா திருத்தணி மாவட்டக் கல்வி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், நல்லாசிரியா் விருது பெற்ற திருத்தணி மாசிலாமணி, அத்திமாஞ்சேரிபேட்டை மாதவன், பாண்டரவேடு சம்பத், நல்லம் கிருஷ்ணன், காக்களூா் போஸ்பாபு, கன்னிகம்மாபுரம் திருஞானசம்பந்தம், புண்ணியம் பாலசுப்பிரமணியன், பாத்தகுப்பம் கொட்ரோஸ், பொதட்டூா்பேட்டை ஊரப்பன் மற்றும் கொண்டாபுரம் கிருபானந்தம் ஆகியோா் பங்கேற்றனா்.

அவா்களை மாவட்டக் கல்வி அலுவலா் முனிசுப்புராயன், பள்ளி துணை ஆய்வாளா் வெங்கடேசுலு ஆகியோா் பாராட்டிப் பரிசு வழங்கினா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் உள்ளிட்டோா்கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com