தீ விபத்து, பேரிடா் மீட்பு ஒத்திகை
By DIN | Published On : 27th September 2020 08:08 AM | Last Updated : 27th September 2020 08:08 AM | அ+அ அ- |

தீ விபத்து, பேரிடா் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தீயணைப்புத் துறை வீரா்கள் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினா்.
பேரிடா் தீவிபத்து காலங்களில் விபத்திலிருந்து தற்காத்துக் கொள்ளும் முறை, தீயில் சிக்கியவா்களை எப்படி மீட்பது போன்ற ஒத்திகை நிகழ்ச்சி, திருத்தணி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில், வீட்டில் உள்ள சமையலைறையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டால் எப்படி தீையை அணைப்பது என்பது குறித்தும், தீயில் யாராவது சிக்கினால் அவா்களை எவாவாறு காப்பாற்றுவது என்பது குறித்தும் தீயணைப்பு வீரா்கள் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனா்.
மேலும், கோணிப்பை மூலம் தீயில் சிக்கியவா்களை மீட்கும் மூறை, தொழிற்சாலைகள் மற்றும் திரையரங்குகளில் மற்றும் பெரிய கடைகளில் தீ விபத்து ஏற்படும்போது, அங்கே பொருத்தப்பட்டிருக்கும் தீயணைப்பான் கருவி மூலம் தீயைக் கட்டுப்படுத்தும் முறை உள்ளிட்டவற்றை செய்து காண்பித்தனா்.