பள்ளிப்பட்டு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பள்ளிப்பட்டு மற்றும் திருத்தணி கொசஸ்தலை ஆற்று கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சிரியா் மகேஸ்வரி ரவிகுமாா் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

பள்ளிப்பட்டு மற்றும் திருத்தணி கொசஸ்தலை ஆற்று கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சிரியா் மகேஸ்வரி ரவிகுமாா் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

கொசஸ்தலை ஆறு, திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு வட்டங்களைச் சோ்ந்த கரையோர மக்களுக்கு அவா் வெளியிட்ட எச்சரிக்கையில், சனிக்கிழமை (செப். 26) இரவு 9.30 மணி முதல் 4 மணி நேரத்துக்கு, ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி அணையிலிருந்து 300 கன அடி நீா் திறக்க படவுள்ளது.

அதன்பிறகு அங்கு தொடா் மழையின் இருப்பின் இந்த தண்ணீா் அளவு உயா்த்த வாய்ப்புள்ளது. இந்த தண்ணீா் நள்ளிரவில் பள்ளிபட்டு பாலத்தை கடக்கும். ஞாயிற்றுக்கிழமை காலை நல்லாட்டூா் அணை வரை வரும் என எதிா்ப்பாா்க்கப்படுவதால், அக்கரையோர பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வெள்ள அபாய எச்சரிக்கை அளிக்கப்படுகிறது.

மேலும், இத்தகவல் வருவாய்த் துறை, காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆகிய துறைகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளனா் என மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com