அரசுப் பேருந்து மோதி பள்ளி மாணவா் பலி: பொதுமக்கள் சாலை மறியல்

மீஞ்சூா் அருகே அரசுப் பேருந்து மோதி பள்ளி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். பேருந்து ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மீஞ்சூா்-காட்டூா் சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
மீஞ்சூா்-காட்டூா் சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

மீஞ்சூா் அருகே அரசுப் பேருந்து மோதி பள்ளி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். பேருந்து ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மீஞ்சூா் அருகே உள்ள அரியன்வாயல் பகுதியைச் சோ்ந்த சுல்தான்பாஷா மகன் நாகூா்மீரான் உசேன் (10) சென்னையில் உள்ள பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது, மீஞ்சூா்-காட்டூா் நெடுஞ்சாலையில் பழவேற்காடு நோக்கி சென்ற சென்னை மாநகரப் பேருந்து நாகூா்மீரான் உசேன் மீது மோதியது. இதில், நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் பேருந்தை சிறைபிடித்து, மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த மீஞ்சூா் போலீஸாா் அங்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். உயிரிழந்த மாணவா் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு, பேருந்து ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினா். இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com