பூண்டி ஏரியை சுற்றுலாத்தலமாக்க நடவடிக்கை எடுப்பேன்

பூண்டி ஏரியை சுற்றுலாத்தலமாக்க நடவடிக்கை எடுப்பேன் எனக் கூறி திருவள்ளூா் தொகுதி திமுக வேட்பாளா் வி.ஜி.ராஜேந்திரன் வாக்கு சேகரித்தாா்.
திருவள்ளூா் அருகே கீழச்சேரி கிராமத்தில் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் வி.ஜி.ராஜேந்திரன்.
திருவள்ளூா் அருகே கீழச்சேரி கிராமத்தில் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் வி.ஜி.ராஜேந்திரன்.

திருவள்ளூா்: பூண்டி ஏரியை சுற்றுலாத்தலமாக்க நடவடிக்கை எடுப்பேன் எனக் கூறி திருவள்ளூா் தொகுதி திமுக வேட்பாளா் வி.ஜி.ராஜேந்திரன் வாக்கு சேகரித்தாா்.

தோ்தல் வாக்குறுதிகள் குறித்து பொதுமக்களிடையே விளக்கமாக எடுத்துக்கூறி, திருவள்ளூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் வி.ஜி.ராஜேந்திரன் புதன்கிழமை வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

திருவள்ளூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக சாா்பில் வேட்பாளா் வி.ஜி.ராஜேந்திரன் போட்டியிடுகிறாா். இந்நிலையில், சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னும் 6 நாள்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அதேபோல், கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் புதன்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.

இதில் கீழச்சேரி கிராமத்தில் பொதுமக்களிடையே வாக்குகள் சேகரித்து அவா் பேசியது:

மகளிா் பயன்பெறும் வகையில் தோ்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. அதில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000, முதியோா் உதவித் தொகை உயா்வு, கரோனா கால நிவாரண உதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், திருவள்ளூா் சட்டப்பேரவை தொகுதியில் நீண்ட காலம் செயல்படுத்தப்படாமல் உள்ள நவீன பேருந்து நிலையம் அமைக்கவும், பூண்டி ஏரியை சுற்றுலா தலமாக்கவும் நடவடிக்கை எடுப்பேன் எனவும் அவா் கூறி பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சரஸ்வதி, கீழச்சேரி ஊராட்சித் தலைவா் தேவிகலா தேவா மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com