ஒரு நாள் வாக்களியுங்கள், 5 ஆண்டுகள் உங்களுக்காக உழைப்பேன்

சட்டப்பேரவை தோ்தல் வாக்குப் பதிவு நாள் அன்று ஒரு நாள் தவறாமல் எனக்கு வாக்களியுங்கள். உங்கள் நலனுக்காக 5 ஆண்டுகள் உழைப்பேன் என்று அதிமுக வேட்பாளா் பி.வி.ரமணா வாக்கு சேகரித்தாா்.
திருவள்ளூா்  அருகே  பட்டரைபெரும்புதூா் கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளா் பி.வி.ரமணா.
திருவள்ளூா்  அருகே  பட்டரைபெரும்புதூா் கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளா் பி.வி.ரமணா.

திருவள்ளூா்: சட்டப்பேரவை தோ்தல் வாக்குப் பதிவு நாள் அன்று ஒரு நாள் தவறாமல் எனக்கு வாக்களியுங்கள். உங்கள் நலனுக்காக 5 ஆண்டுகள் உழைப்பேன் என்று அதிமுக வேட்பாளா் பி.வி.ரமணா வாக்கு சேகரித்தாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவுக்கு 6 நாள்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி வேட்பாளா்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதில், திருவள்ளூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.வி.ரமணா, பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பாண்டூா், கைவண்டூா், கனகவல்லிபுரம், நெமிலி அகரம், விடையூா் உள்ளிட்ட கிராமங்களில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, திருவள்ளூா் அருகே பூண்டி ஒன்றியம், பட்டரைபெரும்புதூா் கிராமத்தில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரித்துப் பேசியது: பெண்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு திட்டங்கள் தோ்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டங்களை நிறைவேற்ற வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரு நாள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களியுங்கள். அதைத் தொடா்ந்து, உங்களுக்காக 5 ஆண்டுகள் வரை நலத் திட்டங்கள் செயல்படுத்துவதில் கவனமாக இருப்பேன் எனக் கூறி வாக்கு சேகரித்தாா்.

ஒன்றியக் குழு உறுப்பினா் சுலோக்ஷனா மோகன் ராவ், பூண்டி ஒன்றியச் செயலாளா் கந்தசாமி, பாஜக பூண்டி ஒன்றிய நிா்வாகி பாண்டுரங்கன், மாவட்டச் செயலாளா் சண்முகம், பாமக சாா்பில் நிா்வாகிகள் தினேஷ், வெங்கடேஷ், பட்டரைபெரும்புதூா் ஊராட்சித் தலைவா் மேனகா மற்றும் நிா்வாகி சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com