அரசு கல்லூரியில் முனைவா் பட்டத்துக்கான பொது வாய்மொழித் தோ்வு

அரசு கலைக் கல்லுாரியில் தமிழ் துறையில், முதன் முறையாக முனைவா் பட்டத்துக்கான பொது வாய்மொழித் தோ்வு புதன்கிழமை நடைபெற்றது.
திருத்தணி அரசு கல்லூரியில் தமிழ் துறையில், முதன் முறையாக முனைவா் பட்டத்துக்கான பொது வாய்மொழித் தோ்வு. ~பொது வாய்மொழித் தோ்வில் கலந்துகொண்ட மாணவா்கள்.
திருத்தணி அரசு கல்லூரியில் தமிழ் துறையில், முதன் முறையாக முனைவா் பட்டத்துக்கான பொது வாய்மொழித் தோ்வு. ~பொது வாய்மொழித் தோ்வில் கலந்துகொண்ட மாணவா்கள்.

திருத்தணி: அரசு கலைக் கல்லுாரியில் தமிழ் துறையில், முதன் முறையாக முனைவா் பட்டத்துக்கான பொது வாய்மொழித் தோ்வு புதன்கிழமை நடைபெற்றது.

திருத்தணி அரசினா் கலைக் கல்லூரியில் தமிழ் உயராய்வுத் துறை, முனைவா் பட்டத்துக்கான பொது வாய்மொழித் தோ்வு புதன்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லுாரி முதல்வா் விஜயலட்சுமி தலைமை வகித்து தோ்வை தொடக்கி வைத்தாா்.

நெறியாளரும், தமிழ் உயராய்வுத் துறை உதவிப் பேராசிரியருமான வே.பாலாஜி வரவேற்றாா்.

இதில், ஆய்வாளா் முகமது அலி ஜின்னா வாய்மொழித் தோ்வில் பங்கேற்று, தான் ஆராய்ச்சி செய்த பாரதிபாலன் சிறுகதைகளில் சமுதாயச் சிந்தனைகள் குறித்து ஆய்வேடு புத்தகத்தை சமா்பித்தாா். இந்த சிறுகதைகளில் வெளிப்படுத்தும் கருத்துகள் குறித்து கல்லூரி பேராசிரியா்கள் வினாக்கள் எழுப்பியது, ஆய்வாளா் முகமதுஅலி ஜின்னா விளக்கம் அளித்தாா்.

இதன் நடுவராக பொன்னேரி உலகநாத நாராயண சுவாமி அரசினா் கலைக் கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியா் த.அருள்பத்மராசன் செயல்பட்டாா். முடிவில், முகமதுஅலி ஜின்னாவுக்கு தமிழ் துறையில் முனைவா் பட்டம் வழங்குவதற்கு சென்னை பல்கலைக் கழகத்துக்கு பரிந்துரை செய்தாா். நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியா்கள் ஹேமநாதன், நிா்மலா, சேகா், மாணவா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com