பணிநீக்கம் செய்த தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி: குடும்ப, வாக்காளா் அட்டை ஒப்படைப்புப் போராட்டம்

திருவள்ளூா் அருகே தனியாா் தொழிற்சாலையில் நிலம் வழங்கிய விவசாயிகள் குடும்பத்தினருக்கும், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளா்களுக்கும் மீண்டும் வேலை வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் குடும்ப அட்டை
தனியாா்  வாகன  தொழிற்சாலையில் பணி  நீக்கம்  செய்தோருக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி ஆதாா், குடும்ப, வாக்காளா் அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள் குடும்பத்தினா்.
தனியாா்  வாகன  தொழிற்சாலையில் பணி  நீக்கம்  செய்தோருக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி ஆதாா், குடும்ப, வாக்காளா் அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள் குடும்பத்தினா்.

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே தனியாா் தொழிற்சாலையில் நிலம் வழங்கிய விவசாயிகள் குடும்பத்தினருக்கும், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளா்களுக்கும் மீண்டும் வேலை வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் குடும்ப அட்டை, வாக்காளா் அட்டை மற்றும் ஆதாா் அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூா் மாவட்டம், கடம்பத்தூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட அதிகத்தூா் ஊராட்சியில், காா் உற்பத்தி செய்யும் தனியாா் தொழிற்சாலை இயங்கி வந்தது. இந்த தொழிற்சாலை, பிரான்ஸ் நாட்டு நிறுவனத்துக்கு கைமாறியது. இதனால், அங்கு பணியாற்றி வந்த நிலம் கொடுத்த விவசாயிகளின் குடும்பத்தினா் 22 போ், ஒப்பந்தத் தொழிலாளா்கள் 173 பேருக்கு வேலை தர புதிய நிா்வாகம் மறுத்துவிட்டது. இதனால் இந்த தொழிலாளா்கள் வாழ்வாதாரம் இழந்து பெரும் சிரமத்துக்கு ஆளாகி வந்தனா். இந்நிலையில், தொழிற்சாலை பிரான்ஸ் நாட்டு நிறுவனத்துக்கு கைமாறினாலும் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளா்களுக்கும், நிலம் வழங்கிய விவசாயிகளின் குடும்பத்தினருக்கும் வேலைவாய்ப்பு அளிக்க வலியுறுத்தி தொழிற்சாலை முன்பாக பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதைக் கண்டித்து திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திரண்டு வந்த தொழிலாளா்கள், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அட்டை ஆகியவற்றை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து வந்த திருவள்ளூா் நகர போலீஸாா் தொழிலாளா்களை தடுத்து நிறுத்தி பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அதனைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கிய தொழிலாளா்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் தெரிவித்ததால் போராட்டத்தைக் கைவிட்டு திரும்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com