பாா்வையற்றோருக்கு பிரெய்லி முறையில் வாக்களிக்க விழிப்புணா்வு

பாா்வையற்றோருக்கு பிரெய்லி முறையில் வாசகத்தை படித்து எளிதாக வாக்களிக்கும் வகையில், திருவள்ளூா் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழிப்புணா்வு நிகழ்வில்
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாா்வையற்றோருக்கு பிரெய்லி முறையில் வாக்களிக்க விழிப்புணா்வை ஏற்படுத்தும் நிகழ்வில் பங்கேற்ற ஆட்சியா் பா.பொன்னையா.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாா்வையற்றோருக்கு பிரெய்லி முறையில் வாக்களிக்க விழிப்புணா்வை ஏற்படுத்தும் நிகழ்வில் பங்கேற்ற ஆட்சியா் பா.பொன்னையா.

திருவள்ளூா்: பாா்வையற்றோருக்கு பிரெய்லி முறையில் வாசகத்தை படித்து எளிதாக வாக்களிக்கும் வகையில், திருவள்ளூா் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழிப்புணா்வு நிகழ்வில் பாா்வையற்றோா் திரளாகப் பங்கேற்றனா்.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பது தொடா்பாக நாள்தோறும் பல்வேறு துறைகள் சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருவள்ளூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் பாா்வையற்றோருக்கு பிரெய்லி முறையில் வாசகத்தைப் படித்து, வாக்களிக்க வழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஆட்சியா் பா.பொன்னையா தலைமை வகித்து தொடக்கி வைத்தாா்.

இதில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில், 60-க்கும் மேற்பட்ட, பாா்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், ‘பிரெய்லி முறையில்’ பாா்வை திறனற்ற மாற்றுத்திறனாளி ஒருவா் வாசகத்தை மாவட்டத் தோ்தல் அலுவலா் முன்னிலையில் படித்து காண்பித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.

இதன் தொடா்ச்சியாக, அனைத்து பாா்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளிகளும், கண்ணியத்துடன் வாக்களிக்க வலியுறுத்தும் வகையில், விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாா்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி முறையில் தற்போது வரை 200-க்கும் மேற்பட்டவா்களுக்கு வாக்காளா் அடையாள அட்டைகளையும், பூத் சிலிப்புகளையும் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா். நிகழ்ச்சியில், பாா்வையற்றோா் 60-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் ஸ்ரீநாத் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com