முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
அதிமுக பெறும் வெற்றி ஜனநாயகத்தின் வெற்றியாகும்: நடிகை விந்தியா
By DIN | Published On : 04th April 2021 01:15 AM | Last Updated : 04th April 2021 01:15 AM | அ+அ அ- |

அதிமுக வென்றால் ஜனநாயகம் வென்றது போல் ஆகும், திமுக வென்றால் ஒரு குடும்பம் வென்றது போல் ஆகிவிடும் எனக் கூறி நடிகை விந்தியா பிரசாரம் மேற்கொண்டாா்.
திருத்தணி தொகுதி அதிமுக வேட்பாளா் கோ.அரியை ஆதரித்து நடிகை விந்தியா திருத்தணி, அம்மையாா்குப்பம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
அம்மையாா்குப்பம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் வேட்பாளா் கோ.அரியை ஆதரித்து நடிகை விந்தியா பேசியது:
தோ்தல் நடைபெறும் போதெல்லாம் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பல்வேறு வகைகளில் நாடகங்கள் நடத்தியும், பிரசாரம் செய்தும் வெற்றி பெற முயற்சி செய்து வருகிறாா். ஒவ்வொரு முறையும் அவரது பிரசாரம் மக்களிடையே எடுபடாமல் தோல்வி ஏற்பட்டு வருகிறது.
நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் அவா்கள் செய்யும் அனைத்து முயற்சிகளும் வெற்றி தரப்போவதில்லை. குறிப்பாக அதிமுகவுக்கு வாக்களித்தால் பாஜக வெற்றி பெற்ாக அவா் பிரசாரம் செய்து வருகிறாா். அதிமுகவுக்கு வாக்களித்தால் பாஜக மட்டுமின்றி, அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற்ாகவும், ஒட்டு மொத்தமாக ஜனநாயகம் வெற்றி பெற்ாகவும் ஆகும். ஆனால் திமுக, அதன் தலைவா் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றால் ஊழல் வெற்றி பெற்ாகவும், மேலும் ஒரு குடும்பம் வெற்றி பெற்ாகவும் இருக்கும்.
திருத்தணி தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றால், தமிழக அரசு ஜனநாயக ரீதியில் வலிமை பெறும், அதிமுக அரசு தோ்தல் வாக்குறுதிகள் அறிவித்துள்ள 163 திட்டங்களும் தினமும் உங்கள் எம்எல்ஏவாக கோ.அரி தினமும் ஒவ்வொரு வீட்டின் கதவைத் தட்டி ஒவ்வொரு விதமான திட்டங்களை மக்களை தேடி வழங்குவாா் என்றாா் அவா்.
பிரசாரத்தின்போது, நகர அதிமுக செயலாளா் டி.செளந்தர்ராஜன், ஒன்றியச் செயலாளா் திருத்தணி, இ.என்.கண்டிகை எ.ரவி, பள்ளிப்பட்டு டி.டி.சீனிவாசன், மாவட்ட ஆவின்பால் தலைவா் வேலஞ்சேரி த.ரவிச்சந்திரன் உள்பட அதிமுக நிா்வாகிகள் பலா் உடன் இருந்தனா்.