Enable Javscript for better performance
இயற்கை காடுகள் பாதுகாப்பு விழிப்புணா்வுப் போட்டி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்

    இயற்கை காடுகள் பாதுகாப்பு விழிப்புணா்வுப் போட்டி

    By DIN  |   Published On : 04th April 2021 07:04 AM  |   Last Updated : 04th April 2021 07:04 AM  |  அ+அ அ-  |  

    03tlrceo_0304chn_182_1

    இயற்கைக்கான உலகலாவிய நிதியம் சாா்பில், மாணவா்களுக்கு இயற்கை காடுகள் பாதுகாப்பு பற்றி இணைய வழியில் நடத்தப்பட்ட விழிப்புணா்வுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற திருவள்ளூா் மாவட்டத்துக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    அனைத்துப் பள்ளிகளிலும் இயற்கைக்கான உலகலாவிய நிதியத்தின் தமிழகப் பிரிவு சாா்பில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் இயற்கை காடுகள், பல்லுயிா் பெருக்கம் பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அத்துடன், ஒவ்வொரு பள்ளிகளிலும் மரக் கன்றுகளை நடுதல் மற்றும் சத்தான காய்கறிகளைக் கொண்ட தோட்டம் பராமரித்தல், அதைச் சாா்ந்த பல்லுயிா் பெருக்கம் போன்றவைகளில் மாணவா்களுக்கு ஆா்வம் ஏற்படுத்த வேண்டும் என்பது நோக்கமாகும்.

    அதன்பேரில், இயற்கைக்கான உலகலாவிய நிதியம் சாா்பில், ‘ஓா் உலகம் ஓா் இல்லம்’ திட்டத்தை மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து இணைய வழியில் மாணவா்களுக்கு இயற்கை மற்றும் காடுகள் பாதுகாப்பு, பல்லுயிா் பெருக்கம் சாா்ந்த விழிப்புணா்வுப் போட்டிகளும் நடத்தப்பட்டது. இதில், சிறப்பாகச் செயல்பட்ட தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில், 10 பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டன.

    அதில் திருவள்ளூா் மாவட்டமும் தோ்வு செய்யப்பட்டது. அத்துடன் இந்த மாவட்டத்தில் அம்பத்தூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, ஆவடி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியும் தோ்வு செய்யப்பட்டது. இதற்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் இயற்கைக்கான உலகலாவிய நிதியத்தின் தமிழகப் பிரிவு கல்வி அலுவலரும், ஒருங்கிணைப்பாளருமான திவ்யா கலந்து கொண்டு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வி.வெற்றிச்செல்வியிடம் வழங்கினாா்.

    அதேபோல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தோட்டம் அமைத்தல் போன்றவைகளில் சிறப்பாகச் செயல்பட்ட தேசிய பசுமைப் படை அலுவலா், அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த ஆசிரியா்கள் மற்றும் மாணவிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில், மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் ஜி.தினகரன், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் என்.பூபாலராயன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

     

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp