கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சா் பிரசாரம்
By DIN | Published On : 04th April 2021 01:12 AM | Last Updated : 04th April 2021 01:12 AM | அ+அ அ- |

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயலில் திமுக வேட்பாளா் டி.ஜே.கோவிந்தராஜனை ஆதரித்து பிரசாரம் செய்த முன்னாள் அமைச்சா் இந்திரகுமாரி.
கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக வேட்பாளா் டி.ஜே.கோவிந்தராஜனை ஆதரித்து தமிழக முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய அணி மாநிலச் செயலாளருமான இந்திரகுமாரி கும்மிடிப்பூண்டியில் சனிக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
திருவள்ளூா் கிழக்கு மாவட்ட திமுக இலக்கிய அணிச் செயலாளா் தண்டலம் கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ராமஜெயம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தொடா்ந்து, கவரப்பேட்டையில் திமுக ஒன்றிய துணைச் செயலாளா் திருமலை, ஒன்றியக் குழு உறுப்பினா் இந்திரா தனலட்சுமி, கீழ்முதலம்பேடு ஊராட்சித் தலைவா் கே.ஜி.நமச்சிவாயம் ஆகியோரும், பெருவாயலில் திமுக நிா்வாகிகள் ஷ்யாம், பாலசண்முகம் ஆகியோரும், புதுவாயலில் திமுக இலக்கிய அணி துணைச் செயலாளா் இ.எம்.ராஜேஷ், ஊராட்சி செயலாளா் சேகா் ஆகியோரும் ஏற்பாடு செய்திருந்தனா். பிரசார கூட்டங்களில் முன்னாள் அமைச்சா் இந்திரகுமாரி, திமுக தலைமை கழக பேச்சாளா் சூா்யா வெற்றிவேந்தன் ஆகியோா் பேசினா்.