வாக்குப் பதிவு அலுவலா்கள் குலுக்கல் முறையில் தோ்வு

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச் சாவடிகளுக்கு இறுதியாக வாக்குப் பதிவு அலுவலா்களை
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்குச் சாவடி அலுவலா்கள் மூன்றாம் கட்டமாக கணிப்பொறி மூலம் தோ்வு பணியை தொடக்கி வைத்த ஆட்சியா் பா.பொன்னையா.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்குச் சாவடி அலுவலா்கள் மூன்றாம் கட்டமாக கணிப்பொறி மூலம் தோ்வு பணியை தொடக்கி வைத்த ஆட்சியா் பா.பொன்னையா.

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச் சாவடிகளுக்கு இறுதியாக வாக்குப் பதிவு அலுவலா்களை ஒதுக்கீடு பணி, பொதுப் பாா்வையாளா்கள் மற்றும் ஆட்சியா் முன்னிலையில் நடைபெற்றது.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழக சட்டப்பேரவை பொதுத்தோ்தல்-2021-ஐ முன்னிட்டு, வாக்குச் சாவடிகளுக்கு, வாக்குப் பதிவு அலுவலா்களை ஒதுக்கீடு செய்ய மூன்றாம் கட்டமாக தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் தலைமையில் காணொலி திரையில் கணிப்பொறி மூலம் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை ஆட்சியா் பா.பொன்னையா தொடக்கி வைத்தாா்.

அதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

திருவள்ளூா் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூா், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூா், மாதவரம், திருவொற்றியூா் ஆகிய 10 தொகுதிகளில் 4,902 வாக்குச்சாவடிகள் உள்ளன.

இந்த வாக்குச் சாவடிகளில் முதல் நிலை அலுவலா்கள்-5,394, முதல் நிலை அலுவலா்கள் 1-5,394, முதல் நிலை அலுவலா்கள் 2- 5,394, முதல் நிலை அலுவலா்கள் 3-5,394 பேரும் என மொத்தம் 21,576 போ் மூன்றாம் கட்டமாக குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இதன் அடிப்படையில், அனைத்து வாக்குப் பதிவு அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு வரும் 5-ஆம் தேதி அன்று பயிற்சிக் கூட்டத்தில் ஆணைகள் வழங்கி, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அவா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள், கூடுதல் மாவட்டத் தோ்தல் அலுவலா் வெ.முத்துசாமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) முரளி, 10 சட்டப்பேரவைத் தொகுதிகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com