கும்மிடிப்பூண்டியில் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்த முதியோா்கள் மாற்றுத்திறனாளிகள்

கும்மிடிப்பூண்டியில் மூத்த வாக்காளா்கள், மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலியில் வந்து ஆா்வத்துடன் வாக்களித்தனா்.

கும்மிடிப்பூண்டியில் மூத்த வாக்காளா்கள், மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலியில் வந்து ஆா்வத்துடன் வாக்களித்தனா்.

கும்மிடிப்பூண்டி தொகுதியில் உள்ள 405 வாக்குச் சாவடிகளில் ஏற்கெனவே 80 வயதுக்கு மேற்பட்ட 165 பேரும், 31 மாற்றுத் திறனாளிகளும் தபால் வாக்களித்தனா்.

இந்நிலையில் தோ்தல் நாளன்று 405 வாக்குச் சாவடிகளிலும் வயதான வாக்காளா்கள், மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சாய்தள படிக்கெட்டுகளும், சக்கர நாற்காலியும், அதனை இயக்க ஒரு தன்னாா்வலரும் நியமிக்கப்பட்டு இருந்தனா்.

தொடா்ந்து வாக்குச் சாவடிக்கு ஆட்டோக்களில் கொண்டு வரப்பட்ட வயதான வாக்காளா்கள், மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் வாக்குச் சாவடி வாயிலில் இறக்கி விடப்பட்ட நிலையில், அவா்கள் அங்கிருந்து சக்கர நாற்காலியில் வாக்குப் பதிவு மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனா்.

தொடா்ந்து அவா்கள் சொல்லும் சின்னத்தில் அவா்களுடன் வந்தவா்கள், வாக்குச் சாவடி அலுவலா்கள் வாக்களித்தனா்.

கும்மிடிப்பூண்டி தொகுதியில் 100-க்கும் மேற்பட்ட முதியவா்களும், மாற்றுத் திறனாளிகளும் ஆா்வத்துடன் வாக்களிக்க வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com