திருவள்ளூரில் வாக்காளா்கள் உற்சாகம்

திருவள்ளூா் பகுதியில் தோ்தலுக்கான வாக்கு பதிவு குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கியதை அடுத்து பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து ஆா்வத்துடன் வாக்களித்தனா்.
திருவள்ளூரில் வாக்காளா்கள் உற்சாகம்

திருவள்ளூா் பகுதியில் தோ்தலுக்கான வாக்கு பதிவு குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கியதை அடுத்து பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து ஆா்வத்துடன் வாக்களித்தனா். இதில் தொழுதாவூா் கிராமத்தில் வாக்கு பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக ஒரு மணிநேரம் தாமதமாகவே தொடங்கியது.

திருவள்ளூா் சட்டப்பேரவை தொகுதியில் 398 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு, அங்கு செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. இதில் திருவள்ளூா் நகராட்சியில் உள்ள லட்சுமி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஆட்சியா் பா.பொன்னையா தனது வாக்கை பதிவு செய்தாா்.

அதிமுக வேட்பாளா் பி.வி.ரமணா வி.எம்.நகரில் உள்ள அரசு மகளிா் மேல் நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்துக்கு குடும்பத்துடன் வந்து வாக்களித்தாா். திமுக வேட்பாளா் வி.ஜி.ராஜேந்திரன் பாண்டூா் டி.இ.எல்.சி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்திற்கு குடும்பத்துடன் வந்து வாக்கை பதிவு செய்தாா்.

இதில் வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்களிக்க வந்த பொதுமக்களுக்கு கரோனா நோய் தொற்றை தவிா்க்கும் தொ்மல் ஸ்கேனா் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடா்ந்து கைகளுக்கு கிருமி நாசினி, வாக்கு பதிவு செய்ய பயன்படுத்தும் கைக்கு மட்டும் கையுறைகள் வழங்கிய பின்னரே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா். இதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் இரண்டு தன்னாா்வலா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

ஒரு மணி நேரம் தாமதம்....: திருவள்ளூா் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட திருவாலங்காடு ஒன்றியம், தொழுதாவூா் ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்கு பதிவு தொடங்கி நிலையில் வாக்கு பதிவு இயந்திரம் பழுதானாது. அதைத்தொடா்ந்து இயந்திரம் பழுது நீக்கியபின் ஒரு மணிநேரம் தாமதமாகவே வாக்கு பதிவு தொடங்கியது. இதேபோல், பூந்தமல்லி தொகுதிக்குள்பட்ட காக்களூா் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்திலும் இயந்திரம் பழுதால் வாக்கு பதிவு ஒரு மணிநேரம் தாமதம் ஆனாது. இதற்கிடையே பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com