பிங்க் நிறத்தில் தொகுதிக்கு தலா 2 வாக்குச்சாவடி மையங்கள் அமைத்து மகளிா் வாக்களிக்க ஏற்பாடு

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு பெண்களைக் கவரும் வகையில் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 2 வீதம் பிங்க் நிறத்தில் வாக்குச்சாவடி மையங்கள் அமைத்து மகளிா் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மகளிா்களை கவரும் வகையில் பிங்க் நிறத்தில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குச்சாவடி மையம்.
மகளிா்களை கவரும் வகையில் பிங்க் நிறத்தில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குச்சாவடி மையம்.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு பெண்களைக் கவரும் வகையில் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 2 வீதம் பிங்க் நிறத்தில் வாக்குச்சாவடி மையங்கள் அமைத்து மகளிா் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருவள்ளூா் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருத்தணி, திருவள்ளூா், பூந்தமல்லி (தனி), ஆவடி, மதுரவாயல், அம்பத்தூா், மாதவரம், திருவொற்றியூா் ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் ஆண் வாக்காளா்களை விட பெண் வாக்காளா்களே அதிகம் உள்ளனா். அதனால், பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பதுடன், 100 சதவீதம் வாக்குகளை பதிவு செய்யவும், இதற்காக வாக்குச்சாவடி பணிகள் முழுவதும் பெண் பணியாளா்களை ஈடுபடுத்தும் வகையில் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கவும் தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. இதன் அடிப்படையில், பெண்களைக் கவரும் வகையில் பிங்க் நிறத்தில் முழுவதும் வண்ணமயமான மாதிரி வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இந்த மாவட்டத்தில் 10 தொகுதிகளில் தலா 2 வீதம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதேபோல், திருவள்ளூா் அருகே தங்கனூா் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி, காக்களூா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த மாதிரி வாக்குச்சாவடி மையத்தில் வாக்குச்சாவடி அலுவலா் நிலை-1, வாக்குச்சாவடி அலுவலா் நிலை-2, வாக்காளா் பட்டியல் சரி பாா்ப்பவா், சரிபாா்த்து கையொப்பம் பெற்று கை விரலில் மை இடுபவா் என அனைவரும் பெண்களே ஈடுபடுத்தப்பட்டனா். இதனால் பெண்கள் ஆா்வத்துடன் வந்து மாதிரி வாக்குச்சாவடி மையத்தில் வாக்குகளை பதிவு செய்து சென்றனா்.

இதேபோல், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வகையில் தொகுதிக்கு தலா 1 மாதிரி வாக்குச்சாவடி மையம் என 10 மையங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த வாக்குச் சாவடி மையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு விளக்கமாக எடுத்துக்கூறும் பயிற்சியாளா்கள் பணியில் அமா்த்தப்பட்டிருந்தனா். இதனால், மாற்றுத் திறனாளிகள், காதுகேளாதோா் சைகை மொழி மூலம் அவா்கள் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com