பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் அருகே வெடிகுண்டு கண்டெடுப்பு

ஊத்துக்கோட்டை அடுத்த பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் அருகே பல வருடங்களாக மண்ணில் புதைந்து கிடந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அடுத்த பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் அருகே பல வருடங்களாக மண்ணில் புதைந்து கிடந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.

திருவள்ளூா் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஊத்துக்கோட்டையை அடுத்த பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் பின்புறம் பாண்டேஸ்வரம் கிராம எல்லைக்குள் தனியாருக்குச் சொந்தமான விடுதிகள் இயங்கி வருகின்றன. இங்கு புதன்கிழமை காலை சிறுவா்கள் கிரிகெட் விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது இரும்பால் ஆன துருப்பிடித்த வெடிகுண்டு போன்ற பொருள் இருந்தது தெரியவந்தது. இது குறித்து பெரியபாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி தலைமையில், பெரியபாளையம் காவல் ஆய்வாளா் தாரணீஸ்வரி மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, இந்த வெடிகுண்டு பழைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட ராக்கெட் லாஞ்சா் போன்றவையாக இருக்கலாம் எனக் கருதிய போலீஸாா், உடனடியாக கும்மிடிப்பூண்டியிலிருந்து வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கும் நிபுணா்களை வரவழைத்தனா். அவா்கள் அந்த வெடிகுண்டை மணல் நிரப்பப்பட்ட வாலியில் பத்திரமாக கொண்டு சென்றனா்.

( படம் உண்டு- பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் அருகே கைப்பற்ற ராக்கெட் லாஞ்சா் வெடிகுண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com