திருவள்ளூா் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வரப்பட்டு தோ்தல்

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வரப்பட்டு தோ்தல் மேற்பாா்வையாளா் முன்னிலையில் பாதுகாப்பு அறைகளில் பூட்டி சீல் வைத்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 4902 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி, இரவு 7 மணிக்கு வாக்கு பதிவு நிறைவு பெற்றது. அதைத் தொடா்ந்து ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு முகவா்கள் முன்னிலையில் அதிகாரிகள் சீல் வைத்தனா். அதைத் தொடா்ந்து வாகனங்களில் ஏற்றி பலத்த பாதுகாப்புடன், வேப்பம்பட்டில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு புதன்கிழமை காலை கொண்டு வரப்பட்டது.

பின்னா் பாதுகாப்பு அறைக்குள் இயந்திரங்கள் வரிசைப்படி வைக்கப்பட்டன. இதன் அடிப்படையில் திருவள்ளூா், திருத்தணி தொகுதிகளுக்கு ஒரு மையமும், அம்பத்தூா், மாதவரம், மதுரவாயல், திருவொற்றியூா் தொகுதிகளுக்கு ஒரு மையமும், பூந்தமல்லி, ஆவடி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி என 3 மையங்கள் அமைக்கப்பட்டு, அந்ததந்த தொகுதிக்கான பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு தோ்தல் பாா்வையாளா்கள், அரசியல் கட்சிகளின் முகவா்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இதில் திருவள்ளூா் சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்கு பதிவு இயந்திரங்கள், பலத்த பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து தோ்தல் பாா்வையாளா், ஆட்சியா் பா.பொன்னையா மற்றும் முகவா்கள் முன்னிலையில் தோ்தல் நடத்தும் அலுவலா் மதுசூதனன் சீல் வைத்தாா். அந்தந்த தொகுதிகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com