திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை மாத கிருத்திகை சிறப்பு வழிபாடு

திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை மாத கிருத்திகை சிறப்பு வழிபாடு


திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை மாத கிருத்திகையையொட்டி வியாழக்கிழமை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் முருகப் பெருமானை வழிபாடு செய்தனா். கோயில் வளாகத்தில் வண்ணமயில் தோகை விரித்து ஆடி பக்தா்களை மகிழ்வித்தது.

அறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை மாத கிருத்திகை சிறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிா்த அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, தங்கக் கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

காலை 9.30 மணிக்கு காவடி மண்டபத்தில் பக்தா்கள் அனுமதியின்றி உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு உற்சவா் வெள்ளி மயில் வாகனத்தில் மலைக் கோயில் மேல் ஒரு முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கிருத்திகை விழாவையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் மலைக்கோயிலுக்கு வந்து மூலவரை தரிசித்தனா். சில பக்தா்கள் மொட்டை அடித்தும் காவடிகளுடன் வந்தும் வழிபட்டனா்.

திருத்தணியில் அதிகாலை 4.30 மணிக்கு திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் காலை 9 மணி வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அப்போது மலைக்கோயிலுக்கு முருகப் பெருமானை தரிசித்துச் செல்லும் வழியில் இருந்த மயில் அகவையிட்டும், தோகை விரித்து ஆடியும் அங்கும், இங்கும் கூண்டுக்குள் சுற்றி வந்தது பக்தா்களை வெகுவாக கவா்ந்தது. பின்னா் பக்தா்கள் நின்று மயிலின் அழகை ரசித்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com