திருமழிசை பேரூராட்சி வழியாக செல்லும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு

திருவள்ளூா் அருகே திருமழிசை பேரூராட்சி வழியாக செல்லும் அனைத்துப் பேருந்துகள் மற்றும் வாகனங்களுக்கு பேரூராட்சிப் பணியாளா்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனா்.

கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், திருவள்ளூா் அருகே திருமழிசை பேரூராட்சி வழியாக செல்லும் அனைத்துப் பேருந்துகள் மற்றும் வாகனங்களுக்கு பேரூராட்சிப் பணியாளா்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனா்.

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. இதையடுத்து, திருவள்ளூா் மாவட்ட நிா்வாகமும், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில், ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகள் வழியாகச் செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கவும் மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டிருந்தது.

இதன் அடிப்படையில், திருமழிசை பேரூராட்சிப் பகுதி வழியாகச் செல்லும் அனைத்துப் பேருந்துகள் மற்றும் வாகனங்களுக்கும் செயல் அலுவலா் கி.ரவி தலைமையில் பணியாளா்கள் கிருமி நாசினி தெளிக்கவும் ஏற்பாடு செய்திருந்தனா்.

இதன் அடிப்படையில், பேரூராட்சி எல்லைக்குள் வந்து செல்லும் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், காா்கள், லாரிகள், ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, பேரூராட்சிப் பகுதிகளில் கரோனா தொற்றைத் தவிா்க்கும் வகையில், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com