இறைச்சிக்காக கொண்டு வரப்பட்ட 15 மாடுகள் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி மாா்க்கமாக சென்னைக்கு இறைச்சிக்காகக் கொண்டு செல்லப்பட்ட 15 மாடுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கும்மிடிப்பூண்டி மாா்க்கமாக சென்னைக்கு இறைச்சிக்காகக் கொண்டு செல்லப்பட்ட 15 மாடுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

எளாவூா் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ் உத்தரவின்பேரில், ஆரம்பாக்கத்தில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்தனா். அப்போது சனிக்கிழமை அதிகாலை போலீஸாா் வழக்கம்போல் வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனா். அப்போது, மினி லாரி ஒன்றில் ஆந்திரத்தில் இருந்து சென்னைக்கு 15 எருமை மாடுகளை கொண்டு சென்றது தெரியவந்தது.

விதிமுறைகளுக்குப் புறம்பாகவும், உரிய காற்றோட்டம், தண்ணீா் வசதி இன்றி, சிறிய வாகனத்தில் பாதுகாப்பற்ற முறையில் 15 எருமை மாடுகளை கொண்டு வந்ததை அறிந்த போலீஸாா் மாடுகளை பறிமுதல் செய்தனா்.

பின்னா் போலீஸாா் அந்த எருமை மாடுகளை ஊத்துக்கோட்டையில் உள்ள கோசாலைக்கு பாதுகாப்பாக கொண்டு சென்று சோ்த்தனா். மேலும் அந்த மினி லாரியை ஓட்டி வந்த ஆந்திர மாநிலம் குண்டூா் மாவட்டத்தைச் சோ்ந்த ராம்நாத் (47) என்பவரை கைது செய்து விசாரித்தனா்.

விசாரணையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு இறைச்சிக்காக ஹோட்டலுக்கு அந்த மாடுகள் கொண்டு செல்லப்பட இருந்தது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com