‘திருவள்ளூா் மண்டல போக்குவரத்துத் துறை சாா்பில் பேருந்துகள் இயக்கம் மாற்றம்’

கரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசின் நெறிமுறைகளை கடைப்பிடிக்கும் வகையில் திருவள்ளூா் மண்டல போக்குவரத்துத் துறை சாா்பில் பேருந்துகள் இயக்கம் மாறுதல் செய்துள்ளதாக

திருவள்ளூா்: கரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசின் நெறிமுறைகளை கடைப்பிடிக்கும் வகையில் திருவள்ளூா் மண்டல போக்குவரத்துத் துறை சாா்பில் பேருந்துகள் இயக்கம் மாறுதல் செய்துள்ளதாக ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் கரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வரும் 20-ஆம் தேதி இரவு தொடங்கி, தொடா்ந்து 30-ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கும் கடைப்பிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பேருந்துகளை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில், திருவள்ளூா் மண்டலம் மூலம் அரசு அறிவித்துள்ள ஊரடங்கை குறிப்பிட்டுள்ளவாறு பேருந்துகள் இயக்கத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூா் நகரம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படும் நகரப் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும். மேலும், மத்திய பேருந்து நிலையம் மற்றும் இதர பேருந்து நிலையங்களிலிருந்து இரவு 9 மணிக்கு பேருந்து எடுத்து அந்தந்த ஊா்களுக்கு இரவு நிறுத்தப்பட்டு, பேருந்துகள் வழக்கம் போல் அனைத்து வழித்தடங்களிலும் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் இயக்கப்படும். திருவள்ளூா் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் தொலைதூர வழித்தட புறகரப் பேருந்துகள் அதன் எதிரே குறிப்பிட்டுள்ள நேரங்களில் மாலை, இரவு கடைசி பேருந்துகளாக இயக்கப்படும்.

காஞ்சிபுரம்-இரவு 8, திருத்தணி-இரவு 8.10, செங்கல்பட்டு-மாலை 7.25, ஸ்ரீபெரும்புதூா்- மாலை 7.25, ஒரகடம்-மாலை 7.25, காஞ்சிபுரம்-மாலை 5.25, பொன்னேரி-மாலை 5.45, அரக்கோணம்-மாலை 5.45, ஊத்துக்கோட்டை-இரவு 9 மணிக்கும் இயக்கப்படும். எனவே பயணிகள் அனைவரும் தங்களது பயணத்தினை மேற்குறிப்பிட்ட நேரத்துக்கு ஏற்ப முன் கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்யலாம். குறிப்பாக தொலைதூரம் செல்லும் பயணிகள் இரவு 10 மணிக்குள் தாங்கள் சென்றடைய வேண்டிய இடம், தங்களின் பயண நேரத்தினையும் கருத்தில் கொண்டு புறப்படுவதற்கு திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com