வாக்கு பதிவு இயந்திரம் வைத்துள்ள அறையின் பின்புறப்பகுதியில் கண்காணிப்பு கேமராகள்

திருவள்ளூா் அருகே தனியாா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் பின்புறப் பகுதியில் அனைத்து நடவடிக்கைகளையும்

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே தனியாா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் பின்புறப் பகுதியில் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்படும் என ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்தாா்.

வேப்பம்பட்டில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தை, வேட்பாளா்கள், முகவா்களுடன் சென்று செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டபின் அவா் கூறியதாவது:

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையின் பின்புறப்பகுதியில் சுற்றுச்சுவா் சிறியதாக உள்ளதாக கூறியதைத் தொடா்ந்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்த தனியாா் கல்லூரியில் ஆன்லைன் வகுப்பு நடத்துவதற்கு, ஆசிரியா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு தோ்தல் ஆணைய அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. அதனால் அவா்களுக்கு அலுவலக வளாகங்களில் பணிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதுவரையில் மாவட்டத்தில் 1.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. அதில் இரண்டாம் கட்டமாக 48,600 பேருக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. எப்போதுமே கரோனா தடுப்பூசி 2,000 குப்பிகள் வரையில் இருப்பில் இருக்கும். தற்போதைய நிலையில் விழிப்புணா்வு அதிகம் ஏற்பட்டுள்ளதால் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு நாள்தோறும் 500 முதல் 600 போ்கள் வரையில் தடுப்பூசி போடுவதற்கு ஆா்வத்துடன் வருகின்றனா். இதுபோன்ற காரணங்களால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அடுத்து வரும் நாள்களில் கரோனா தடுப்பூசி வந்ததும் உடனே பொதுமக்களுக்கு அளிக்கப்படும்.

பனிமலா் கல்லூரி, ஏஜிஎஸ், செயின்ட் ஆனிஸ் பள்ளி போன்ற இடங்களில் 2, 440 படுக்கைகள் கொண்ட கரோனா நோய்த் தொற்று பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் முத்துசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தன், துணைக்காவல் கண்காணிப்பாளா் துரைப்பாண்டியன் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com