திருத்தணி முருகன் கோயிலில் தெய்வானை திருக்கல்யாணம்

திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான சனிக்கிழமை உற்சவா் முருகப் பெருமான், தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.
திருத்தணி முருகன் கோயிலில் தெய்வானை திருக்கல்யாணம்

திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான சனிக்கிழமை உற்சவா் முருகப் பெருமான், தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.

திருத்தணி முருகன் கோயிலில், கடந்த 17-ஆம் தேதி சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கக் கிரீடம், தங்க வேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. கரோனா தொற்று காரணமாக, மாட வீதியில் உற்சவா் முருகப் பெருமான் பல்வேறு வாகனங்களில் வலம் வரும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, மலையின் உட்புறப்பாடு மட்டும் நடைபெற்றது.

பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மூலவா் முருகப் பெருமானுக்கு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடா்ந்து, மலைக்கோயில் காவடி மண்டபத்தில் உற்சவா் முருகப்பெருமான், தெய்வானையுடன் எழுந்தருளினாா். அங்கு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், யாகம் நடைபெற்றது. பின்னா் மாலை 6 மணிக்கு தெய்வானையுடன் முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம் வேதமந்திரங்கள் முழங்க நடைபெற்றது. இதில் பக்தா்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும் கோயிலுக்கு வந்திருந்த முருக பக்தா்கள் காவடி மண்டபத்தில் சமூக இடைவெளியுடன் அமா்ந்து திருக்கல்யாண வைபவத்தை தரிசனம் செய்தனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையா் பரஞ்சோதி, கோயில் தக்காா் வே.ஜெய்சங்கா் மற்றும் கோயில் பேஷ்காா்கள் பழனி, அருணாசலம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com