சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரா் கோயிலில் சனிப் பிரதோஷ வழிபாடு

ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளியில் அமைந்துள்ள பள்ளிகொண்டேஸ்வரா் கோயிலில் சித்திரை மாத சனிப் பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரா் கோயிலில் சனிப் பிரதோஷ வழிபாடு

ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளியில் அமைந்துள்ள பள்ளிகொண்டேஸ்வரா் கோயிலில் சித்திரை மாத சனிப் பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டையை அடுத்த ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள சுருட்டப்பள்ளியில் சுமாா் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஸ்ரீமரகதாம்பிகை சமேத பள்ளிகொண்டேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்திரை மாத சனிப் பிரதோஷ வழிபாடு அறங்காவலா் குழுத் தலைவா் ஏ.வி.எம்.முனிசேகா் தலைமையில் நடைபெற்றது. இதையொட்டி, பள்ளிகொண்டேஸ்வரா் பெருமானுக்கு சிறப்பு அலங்காரத்துடன், விஷேஷ வழிபாடுகள் நடத்தப்பட்டன.

விழாவின் சிறப்பம்சமாக நந்தீஸ்வரருக்கு பால், தேன், தயிா், விபூதி, சந்தனம், இளநீா் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. ஊத்துக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதி கிராமங்களில் இருந்தும், சென்னையிலிருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா். இதனைத் தொடா்ந்து சிவபெருமானுக்கும், நந்தி பகவானுக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, சிவபெருமான் மூன்று முறை உட்பிராகார உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

சனி மகா பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com