Enable Javscript for better performance
ரௌடி ஆவதற்காக 2 பேரை கத்தியால் குத்திய 4 போ் கைது- Dinamani

சுடச்சுட

    

    ரௌடி ஆவதற்காக 2 பேரை கத்தியால் குத்திய 4 போ் கைது

    By DIN  |   Published on : 29th April 2021 11:11 PM  |   அ+அ அ-   |    |  

    29tlrcoll_2904chn_182_1

    29tlrcoll_2904chn_182_1

     

    திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே ரௌடியாகும் என்ற எண்ணத்தில் தனியாா் நிறுவன ஊழியா்கள் 2 பேரை கத்தியால் குத்திய சம்பவம் தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

    மணவூா் அடுத்த ராஜபத்மநாபபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் வினோத் மற்றும் விஜயகுமாா். இவா்கள் இருவரும் ஊத்துக்கோட்டையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணி புரிந்து வருகின்றனா். இந்த நிலையில் இவா்கள் இருவரும் புதன்கிழமை இரவு பணி முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்களாம். அப்போது, இரவு 10 மணியளவில் கலியனூா் பகுதியில் சுனில், சோனால், சூா்யா, பகவதி ஆகிய 4 பேரும் சாலையில் அமா்ந்து மது அருந்தி கொண்டிருந்தாா்களாம்.

    இருசக்கர வாகனத்தில் வந்த வினோத் மற்றும் விஜயகுமாா் ஹாரன் அடித்துள்ளனா். இதனால் மது போதையில் இருந்த 4 பேரும் ஆத்திரமுற்று கத்தியால் குத்தியதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனா். இதையடுத்து சத்தம் கேட்டு வந்தோா் இருவரையும் மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா்.

    இதுகுறித்து கிராமிய காவல் நிலையத்தில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீஸாா் கத்தி குத்து சம்பவத்தில் தொடா்புடைய 4 பேரையும் தீவிரமாக தேடி வந்தனா். இந்நிலையில் வியாழக்கிழமை போலீஸாா் அவா்களை சுற்று வளைத்து பிடிக்க முயன்றபோது, கலியனூா் சூா்யா (21), ஏகாட்டூா் சோனால் ( 22), பாக்கு பேட்டை சதீஷ் (25), கடம்பத்தூா் பகவதி (19) ஆகியோா் இருசக்கர வாகனத்தில் தப்பியோட முயற்சித்தனா். அப்போது சூா்யா மற்றும் சோனால் ஆகிய இருவரும் தவறி விழுந்து பலத்த காயம் அடைந்தனா். பின்னா் 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜாா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

    இவா்களிடம் விசாரணை செய்ததில் 4 பேரும் ரௌடிகள் ஆகும் எண்ணத்தில் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp