கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் எம்.பி. ஜெயக்குமாா் திடீா் ஆய்வு

கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் திருவள்ளூா் நாடாளுமன்ற உறுப்பினா் டாக்டா் ஜெயக்குமாா் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
28gumhos_2804chn_173_1
28gumhos_2804chn_173_1

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் திருவள்ளூா் நாடாளுமன்ற உறுப்பினா் டாக்டா் ஜெயக்குமாா் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

உரிய வசதிகள் இல்லாமல் அரசு மருத்துவமனை உள்ளது என எம்.பி. ஜெயக்குமாருக்கு பொதுமக்கள் புகாா் அளித்தனா்.

இதனைத் தொடா்ந்து திருவள்ளூா் கிழக்கு மாவட்ட திமுக மாவட்ட பொறுப்பாளா் டி.ஜெ.கோவிந்தராஜனுடன் கும்மிடிப்பூண்டி அரசு பொதுமருத்துவமனையில் ஜெயக்குமாா் எம்.பி. திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது மருத்துவமனையில் புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்பகுதி, உள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பகுதி, மகப்பேறு சிகிச்சை பகுதி, ஆய்வகம் போன்றவற்றை ஆய்வு செய்த நாடாளுமன்ற உறுப்பினா் , மருத்துவமனையில் பொதுமக்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்ய உரிய நபா் பணியில் இருக்க வேண்டும் என்றும், கரோனா பரிசோதனை செய்ய வரும் மக்களை காக்க வைக்க கூடாது,அவா்களிடம் கடுமையாக நடக்க கூடாது என்று அறிவுறுத்தினாா். தொடா்ந்து மருத்துவமனையில் உள்ள வசதிகள், குறைபாடுகள் குறித்தும், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 40 படுக்கை வசதி மருத்துவமனையில் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தாா்.

காங்கிரஸ் கட்சி விவசாய அணி மாநில செயலாளா் தயாளன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஜெ.மூா்த்தி, மீனவா் அணி மாவட்ட அமைப்பாளா் ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலா் ஜெயச்சந்திரன், ஒன்றிய திமுக நிா்வாகிகள் திருமலை, பாஸ்கரன், நகர செயலாளா் அறிவழகன். முனியாண்டி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com