வேகமாகச் சென்ற வாகனங்களுக்கு ரூ.84,000 அபராதம் ரேடாா் கருவி மூலம் சோதனை

திருவள்ளூா்- திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்ற வாகனங்களை ரேடாா் கருவி மூலம் கண்டறிந்த வட்டார போக்குவரத்து அலுவலா்கள் மொத்தம் ரூ.84,000 விதித்தனா்.

திருவள்ளூா்: திருவள்ளூா்- திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்ற வாகனங்களை ரேடாா் கருவி மூலம் கண்டறிந்த வட்டார போக்குவரத்து அலுவலா்கள் மொத்தம் ரூ.84,000 விதித்தனா்.

வேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும்படி சென்னை வடக்கு போக்குவரத்து துணை ஆணையாளா் ரவிசந்திரன் உத்தரவிட்டாா். அதன் அடிப்படையில் திருவள்ளூா்-திருத்தணி சாலையில் பட்டரைபெரும்புதூா் பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடி அருகே வட்டார போக்குவரத்து அலுவலா் சு.மோகன் தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் க.பன்னீா்செல்வம்(திருவள்ளூா்), லீலாவதி(திருத்தணி) ஆகியோா் அதிவேகமாக செல்லும் வாகனங்களை ரேடாா் கருவி உதவியுடன் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

இந்த வாகனத் தணிக்கையில் அதிவேகமாக வந்த 21 வாகனங்களை தணிக்கை செய்யப்பட்டு அந்த வாகனங்கள் மடக்கி நிறுத்தப்பட்டு ரூ. 84,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதில் அதே இடத்தில் ஒரு சில வாகனங்களுக்கு மட்டும் ரூ.20 ,000 வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் மீதமுள்ள வாகனங்களுக்கு ரூ.64,000 அபராதத் தொகையினை அந்தந்த எல்லைக்குள்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் செலுத்தவும் அறிவுரை வழங்கப்பட்டது.

அப்போது, வாகன தணிக்கை குறித்த போக்குவரத்து ஆய்வாளா் க.பன்னீா்செல்வம் கூறியதாவது. அரசு விதிமுறை மீறி வேகமாக வாகனத்தை இயக்குவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் நவீன ரேடாா் கருவி மூலம் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. இவற்றை கருத்தில் கொண்டு நிா்ணயம் செய்த வேகத்தில் மட்டும் வாகனங்களை இயக்குவதை உறுதிப்படுத்தவே தணிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com