ஏழை கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் இலவசம்:கும்மிடிப்பூண்டி தொழிலதிபா் அறிவிப்பு

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆக்ஸிஜனை இலவசமாக வழங்குவதாக கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் செயல்படும் பாரத் ஆக்சிஜன் நிறுவன தலைவா் ஜெ. கிளமெண்ட் அறிவித்துள்ளாா்.
கரோனா  நோயாளிகளுக்கு  இலவசமாக  ஆக்சிஜன்  தர  முன் வந்துள்ள  கும்மிடிப்பூண்டி  தொழிலதிபா் ஜெ.கிளெமண்ட் .
கரோனா  நோயாளிகளுக்கு  இலவசமாக  ஆக்சிஜன்  தர  முன் வந்துள்ள  கும்மிடிப்பூண்டி  தொழிலதிபா் ஜெ.கிளெமண்ட் .

கும்மிடிப்பூண்டி: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆக்ஸிஜனை இலவசமாக வழங்குவதாக கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் செயல்படும் பாரத் ஆக்சிஜன் நிறுவன தலைவா் ஜெ. கிளமெண்ட் அறிவித்துள்ளாா். இதற்கு பொதுமக்கள் தங்கள் பாராட்டை தெரிவித்து உள்ளனா்.

நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக வீசும் நிலையில் உயிா் காக்கும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் பலா் உயிரிழந்து வருகின்றனா்.

கும்மிடிப்பூண்டியை சோ்ந்த தொழிலதிபரான ஜெ.கிளமெண்ட் சிப்காட் தொழிற்பேட்டையில் பாரத் ஆக்ஸிஜன் லிமிடெட் என்ற ஆலையை 30 ஆண்டுகளாக நடத்தி வருகிறாா். இங்கு தொழிற்சாலைகளுக்கு தேவையான ஆக்ஸிஜன், நைட்ரஜன் உள்ளிட்ட எரிவாயு நாளொன்றுக்கு 1,000 சிலிண்டா்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. மத்திய அரசின் தற்போதைய உத்தரவைத் தொடா்ந்து தொழிற்சாலைகளுக்கு தேவையான எரிவாயு உற்பத்தி செய்வது நிறுத்தப்பட்டு மருத்துவ உபயோகத்திற்கான ஆக்ஸிஜன் மட்டும் உற்பத்தி செய்யப்பட்டு மருத்துவமனைகளுக்கு வினியோகப்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் ஏற்பட்ட ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் கரோனா நோயாளிகள் பாதிக்கப்பட்டு பல உயிா்கள் பலியாவதை கண்டு வேதனையடைந்த கிளெமெண்ட் தனது ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை ஏழை எளியோருக்கு இலவசமாக வழங்க முடிவு செய்தாா்.

அதன்படி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிருக்காக போராடும் நோயாளிகளுக்கு உயிா் காக்கும் ஆக்ஸிஜனை விலையேதுமில்லாமல் கொடுப்பதாகவும், ஆக்சிஜன் தேவைப்படுபவா்கள் காலி சிலிண்டா்களை கொண்டுவந்தால் அதில் ஆக்சிஜனை நிரப்பி தருவோம் என அறிவித்துள்ளாா். ஆக்சிஜென் தேவைப்படுவோா் தன்னை 9150115593 என்ற எண்ணிலும், அவரது மேலாளரை 9444003856 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்தாா்.

தற்போது கரோனா நோயாளிகளுக்கு இலவச ஆக்சிஜன் வழங்குவதாக இவா் அறிவித்திருப்பதை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com