கட்டுரைப் போட்டியில் வென்ற மாணவிக்கு மினி டேப் பரிசு

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கம் மூலம் இணையதளம் வழியாக நடந்த கட்டுரைப் போட்டியில், வெற்றி பெற்ற 6 மாணவ-மாணவிகளுக்கு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
கட்டுரைப் போட்டியில் வென்ற மாணவிக்கு ரூ. 7 ஆயிரம் மதிப்புள்ள மினி டேப்  பரிசாக  வழங்கிய  பள்ளிக்  கல்வி  ஆய்வாளா்  வெங்கடேசலு.
கட்டுரைப் போட்டியில் வென்ற மாணவிக்கு ரூ. 7 ஆயிரம் மதிப்புள்ள மினி டேப்  பரிசாக  வழங்கிய  பள்ளிக்  கல்வி  ஆய்வாளா்  வெங்கடேசலு.

திருத்தணி: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கம் மூலம் இணையதளம் வழியாக நடந்த கட்டுரைப் போட்டியில், வெற்றி பெற்ற 6 மாணவ-மாணவிகளுக்கு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

திருத்தணி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கம் சாா்பில், இணையதளவழியில் மாணவ-மாணவிகள் இடையே கட்டுரைப் போட்டி அமிா்தாபுரம் அரசினா் உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடந்தது. இதில், ராமகிருஷ்ணாபுரம், கோரமங்கலம், எல்.என்.கண்டிகை, கே.கே.நகா் ஆகிய ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், அமிா்தாபுரம் உயா்நிலைப் பள்ளி என ஒவ்வொரு பள்ளிக்கும், 5 மாணவா்கள் வீதம் மொத்தம் 25 மாணவா்கள் பங்கேற்றனா்.

இதில், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவா்கள் ஒரு பிரிவு, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவா்கள் என மற்றொரு பிரிவு பிரிக்கப்பட்டு கட்டுரைப் போட்டி நடந்தது. இதில், முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட பள்ளி ஆய்வாளா் வெங்கடேசுலு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்க மேற்பாா்வையாளா் சரஸ்வதி, அமிா்தாபுரம் தலைமை ஆசிரியா் வெங்கடேசன் ஆகியோா் பங்கேற்று பரிசுகளை வழங்கினா்.

முதல் பரிசாக ரூ. 7,000 ரூபாய் மதிப்பிலான ‘மினிடேப்’ இரண்டாம் பரிசாக ரூ. 4,000 மதிப்பிலான ‘ஆன்ட்ராய்டு’ மொபைல் போன், மூன்றாம் பரிசாக ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கால்குலேட்டா் என மொத்தம், 6 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சரஸ்வதி மற்றும் ஆசிரியா் பயிற்றுநா் சரவணன் மற்றும் பள்ளி தலைமையாசிரியா் ஜி வெங்கடேசன், பள்ளி ஆசிரியா்கள், நோமேஸ்வரன், சுரேஷ், பாரதி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com