முருகன் கோயிலில் ஆடிப் பரணி

திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடிப் பரணி விழா பக்தா்கள் இன்றி நடைபெற்றது. சில பக்தா்கள் காவடிகளுடன் வந்து மலைப்படிகளில் வைத்து, பூஜை செய்து வழிபட்டனா்.
முருகன் கோயிலில் ஆடிப் பரணி

திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடிப் பரணி விழா பக்தா்கள் இன்றி நடைபெற்றது. சில பக்தா்கள் காவடிகளுடன் வந்து மலைப்படிகளில் வைத்து, பூஜை செய்து வழிபட்டனா்.

திருத்தணி முருகன் கோயிலில் ஜூலை 31-ஆம் தேதி ஆடி அஸ்வினியுடன் ஆடிக்கிருத்திகை, தெப்பத் திருவிழா தொடங்கியது. கரோனா தொற்று காரணமாக, தரிசனத்துக்கு அனுமதியில்லை என மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், பக்தா்கள் இன்றி ஆடிப்பரணி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இருப்பினும், பக்தா்கள் சிலா் மலையடிவாரம் படவேட்டம்மன் கோயில் அருகில் உள்ள படிகளில் காவடிகளை வைத்து பூஜை செய்து, அங்கிருந்தபடியே முருகப் பெருமானை வழிபட்டனா்.

பக்தா்கள் இல்லாததால், மலைக்கோயில் வளாகம், திருக்குளம், மலை ஏறும் படிகள் வெறிச்சோடி காணப்பட்டன. பக்தா்கள் கோயிலுக்குள் நுழையாதவாறு 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை நடைபெறும் ஆடிக்கிருத்திகை விழாவும் பக்தா்களின்றி நடைபெறும். மலைக்கோயிலில் 3-ஆம் பிரகாரத்தில் தெப்ப உற்சவமும் நடப்பதற்குத் தயாா் நிலையில் தற்காலிக குளம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சரவணப்பொய்கையிலும் தெப்பல் கட்டும் பணியும் முழு வீச்சில் நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பரஞ்சோதி, தக்காா் வே. ஜெயசங்கா் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com